அமைச்சர் மைத்திரிபால சிரிசேனவுக்கு முன்னாள் சபாநாயகர் முஹம்மத்துடன் ஏற்பட்ட கசப்பான அனுபவம்
(அஷ்ரப் ஏ. சமத்)
சுகாதார அமைசச்ர் மைத்திரிபால சிரிசேனவின் கூறிய ஒரு சிங்கள எழுத்தினை எழுத்துப் பிழை பார்ப்பவர் திருத்தியதால் அவரின் நேர்காணலே பிழையான அர்த்தத்தை உண்டுபண்ணிவிட்டது. இன்று (25) ஊடக அமைச்சின் கொழும்பு மாவட்த்தில் உள்ள ஊடகவியளார்களுக்கு டெங்கு பற்றிய கருந்தரங்கொன்று சுகாதார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அங்கு உரையாற்றிய அமைசச்ர் மைத்திபால தெரிவித்தாவது,
எனது பாராளுமன்ற 25 வருட கால வாழ்வு பற்றி ஒரு நேர்காணலைக் காண்பதற்கு பிரபல சிங்களப் பத்திரிகையின் ஞாயிறு இதழில் பிரசுரிக்க ஒர் ஊடகவியலாளர் என்னை கடந்த புதன்கிழமை நேர்கண்டார். அவர் என்ணை நேர்காணலின்போது மறக்க முடியாத சம்பவங்கள் ஏதும் உண்டா ? எனக் கேட்டார். அதற்கு நான் பாரளுமன்றத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை மட்டும் எனது வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் என தெரிவிக்கின்றேன்.
'நான் முதன் முதலில் 92ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் இருக்கும்போது முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசாவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மாணம்மொன்ரு ஆளும் கட்சி எதிர்க்கட்சியினர் அன்டு கொண்டுவந்தார்கள். அப்போது சபாநாயகராக எம்.எச்.முஹம்மத் பதவிவகித்தார். அவர் அந் நம்பிக்கை இல்லா பிரேரணையை ஏற்காது இருந்தார். அதற்காகவே நான் திடிரென பாராளுமன்றத்தில் திடிரெண எழுந்து கௌரவ 'பக்கா நாயக்க அவர்களே' என்று சபையில் சொன்னேன். உடனே சபாநாயகர் கோபமுற்று அவ் வசனத்தை உடனடியாக வாபஸ் பெறவும் எனத் தெரிவித்தார்இ நான் மீண்டும் பகா நாயக்க அவர்களே என்று கூறினேன். உடன் அவர் வெளியில் நின்ற பொலிசாரைக் அழைத்து எண்னை வெளியில் தூக்கிக்கொண்டு போடும்படி உத்தரவிட்டார். உடன் உள்ளே 6பொலிசார் வந்து எண்னைத் தூக்கிக் கொண்டு வெளியே போட்டார்கள். அதுதான் எனது பாராளுமன்ற வாழ்வில் மறக்க முடியாத சம்பவம். (சிங்களத்தில் பகா நாயக்க என்ற அர்த்தம் டீசiடிநசல களவாக பணம்பெற்ற) பெற்ற சபாநயகரே என அர்த்தமாகும்.
இதனை சரியாக எழுதி கொடுத்திருந்தார் எண்னை நேர்கண்ட ஊடகவியலாளர் அதனை அந்த பிரபல பத்திரிகையில் பிரசுரிக்க முன் எழுத்துப்பிழை பார்த்தவர் 'பக்கா' நாயக்க அவர்களே என்ற வசனத்தை சபா நாயகரே என்று திருத்தியிருந்தார். பத்திரிகையில் வெளிவந்த பின் என்ணிடம் பலர் கேள்வி கேட்கின்றனர். சபாநாயகர் என்று சொன்னதுக்கு உங்களை ஏன் பொலிசார் வெளியில் கொண்டு போட்டார்கள்.
இது தான் ஒரு வசனத்தை பிழைதிருத்தி மாற்றியதால் அந்த நேர்காணில் அர்த்தமே இல்லாமல் போகிவிட்டது என அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அங்கு வருகை தந்திருந்த ஊடகவியளாலருக்கு இதனை நீங்கள் பாடமாகக் கொள்ளவும் எனவும் தெரிவித்தார்.

Post a Comment