மாடறுப்பைத் தடை செய்யக் கோரும் சிங்கள ராவயவின் கோரிக்கை நியாய பூர்வமானதா..?
(Shareefdeen)
உயிரினங்களை வதை செய்வதைத் தவிர்க்கக் கோருவது எல்லா மதங்களிலும் உள்ளவையே. எனினும், உயிரினங்களுக்கு அன்பு காட்டுமாறும், அநீதி செய்யக் கூடாது என்றும் இஸ்லாம் கூறுமளவு வேறு எந்த மதங்களும் கூறவில்லை.
ஆனால், மாடறுப்பதை மாத்திரம் பூதாகரமாக்கி இந்த நாட்டில் தடைசெய்யக் கோருவது மிருக வதையை நிறுத்துவதற்காக எனக் கூறுவது அறிவுக்கு அப்பாற்பட்டதே.
மாடறுப்பதை மிருக வதையாக நினைக்கும் இவர்கள் எந்த மனம்கொண்டு துடிக்கத் துடிக்க கொல்லப்படும் கோழி பற்றியோ மீன் பற்றியோ எதுவும் பேசாமல் மௌனமாக இருக்கின்றனர்? இவைகளோடு ஆடு, பன்றி போன்ற மிருகங்கள் உணவுக்காகக் கொலை செய்யப்படுவதில்லையா?
மூன்று மாதங்களுக்கிடையில் 20000 பசுக்கள் பாற்பண்ணைகளுக்காக இந்த நாட்டில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதே. அவைகள் வயது முதிர்ந்து அவற்றின் மூலம் பால் கரக்க முடியாதபோது அவற்றை என்ன செய்வது? முதலில் மிருக வதை என்ன என்பதை இவர்கள் புரிய வேண்டும். மாட்டை கடவுளாக வைத்து வணங்கும் இந்துக்கள் கூட வாழும் இந்தியாவை,யும், ஏனைய நாடுகளையும் இவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
மாட்டுக்கு சூடுபோடுவது, காலில் இரும்பினால் லாடம் அடிப்பது, கடும் சுமைகளை இழுக்கச் செய்வது, போதுமான உணவு, நீர் போன்றவற்றை வழங்காமல் கட்டி வைப்பது, வேகமாக ஓடுவதற்காக கடுமையாக அடிப்பது, திட்டுவது போன்றவை யாவும் மிருக வதை என்பதில் எள்ளலவும் சந்தேகமில்லை.
இந்த நாட்டில் அசைவ உணவு மாத்திரமே உண்ண வேண்டும் என அனைத்து மிருகங்களையும், கடலில் வாழும் மீண்களையும் தடை செய்யக் கோரினால் ஓரளவுக்கு இவர்களின் கூற்றை நியாயப் படுத்தலாம். ஆனால் இவர்கள் வேறு காரணங்களுக்காகவே இப்போராட்டத்தை மேற்கொள்கின்றனர் என்பது தெளிவு. மேலும் இவர்கள் பிற நாட்டிலிருந்து இறைச்சியை இறக்குமதி செய்வதாக ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார்களே. உண்மையில் மிருகங்கள் அறுக்கப்படுவதை வெறுப்பவர்களாக இருந்தால் தனது நாட்டில் அறுக்கப்படாது பிற நாடொன்றில் அறுக்கப்பட்டதை இறக்குமதி செய்வதை விரும்புவார்களா? சிறு பிள்ளைத் தனமான குறிக்கோள்.

மாடு அருக்கக் கூடாது ஆனால் மாட்டின் தோலால் செய்த ரபானை அவர்களது பன்சலைகளில் அடிப்பது நல்லது...!!!!!
ReplyDeleteவாயைக் கெலப்புரானுகள்...
This is non-sense, and i agreed with the posted article.
ReplyDeleteIf you can write in Sinhala Language it will be very usfull. Thanks.
ReplyDelete