ஏ. ஆர். ரஹ்மானுக்கு சில ஆலோசனைகள்..!
(சுவனப்பிரியன்)
உங்களின் முன்னேற்றத்தை கடந்த 20 வருடங்களாக தொடர்ந்து பார்த்து வருகிறேன். எவ்வளவு உயரத்துக்கு போனாலும் 'எல்லா புகழும் இறைவனுக்கே' என்று கூறும் அந்த தன்னடக்கத்தைக் கண்டு வியந்துள்ளேன். இளையராஜா, எம் எஸ் வி என்று பல மூத்த இசையமைப்பாளர்களை மேடையில் சந்தித்தாலும் இதுவரை அவர்களின் கால்களில் விழுந்ததில்லை. சுயமரியாதைக்காரர். இறைவனுக்கு மட்டுமே எனது தலை சாயும் என்ற கொள்கையுடையுவர். கடவுள் ஸ்தானத்திற்கு உங்களை சிலர் மேடையில் உயர்த்திய போது அதனை கடுமையாக அங்கேயே எதிர்த்தவர். காலை நேர தொழுகை தவறி விடக் கூடாது என்பதற்காக ஒலிப்பதிவை இரவு முழுக்க வைப்பவர். ஐந்து வேளை தொழுகையை தவறாமல் தொழுது இறைவனுக்கு நன்றி செலுத்துபவர். மாற்று மதத்தவர்கள் மத்தியில் அதிகம் வேலை செய்தாலும் அனைவருடனும் எந்த முறுகலும் இல்லாமல் அன்போடு அனைவரையும் அரவணைத்து செல்பவர் என்று உங்களின் நல்ல செயல்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
இவ்வளவு நல்ல செயல்களுக்கு சொந்தக்காரரிடம் சில குறைகள் இருப்பதை நான் அறிவதால் அதனை ஞாபகப்படுத்தும் முகமாக இந்த பதிவிலே சில குறைகளை பதிக்கிறேன்.
மனிதர்களுக்கு தலை வணங்காத நீங்கள் இறந்து விட்ட ஒரு சில அடியார்களின் சமாதிகளில் உங்கள் தலையை சாய்க்கிறீர்கள். நாகூர் தர்ஹா, அஜ்மீர் தர்ஹா என்று அவ்வப்போது தர்ஹாக்களுக்குச் சென்று உங்களின் வணக்கத்தைச் செலுத்துகிறீர்கள். இது குர்ஆனின் கட்டளைக்கு மாற்றமான செயல். முகமது நபி கூட 'தனது அடக்கஸ்தலத்தில் யாரும் பிரார்த்தனை செய்ய வர வேண்டாம். இறைவனிடம் மட்டுமே தொழுது கேளுங்கள்' என்று கூறியுள்ளார். இந்த சமாதி வழிபாடு என்பது ஷியாக்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. மொகலாய மன்னர்கள் அதிகம் பேர் ஷியாக்களாக இருந்ததால் நகர் வலம் வரும் போது ஆங்காங்கு உள்ளவர்கள் ஏதேனும் ஒரு சமாதியைக் காட்டி அரசர்களிடம் இனாமாக நிலங்களை பெறுவார்கள். இது ஒரு மறைமுக வியாபாரமாக அந்த காலத்தில் நடந்தது. அடங்கியிருப்பவர் நல்லவரா கெட்டவரா என்பது கூட பலருக்கு தெரியாது.
ஒருவர் நல்லவரா கெட்டவரா என்பதை இறைவன்தான் முடிவு செய்ய முடியும். மேலும் குர்ஆனில் பல இடங்களில் தனக்கு இணையாக சிறு தெய்வ வழிபாடு செய்பவர்களை இறைவன் கடுமையாக கண்டிக்கிறான். அந்த தவறை மன்னிக்கவே மாட்டேன் என்று கண்டிப்பாக சொல்கிறான். தொன்மையான இந்து மதம் சீரழிந்து அதன் உண்மை முகத்தை இழந்ததற்கு முக்கிய காரணம் சிறு தெய்வ வழிபாடே. இந்த சிறு தெய்வ வழிபாட்டை இந்துக்கள் எதிர்க்காமல் அனுமதித்ததால்தான் ஏக தெய்வ வணக்கம் நமது தமிழர்களிடத்தில் மறைந்து போனது.
இஸ்லாமிய வேத நூலான குர்ஆனும், இறைத் தூதரான முகமது நபி இது போன்ற தர்ஹா வணக்கங்களை தடை செய்திருப்பதாலும் இனி வரும் காலங்களில் தர்ஹா வணக்கங்களை தவிர்த்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
அடுத்து நேற்று உங்கள் தளத்தில் ஒரு செய்தியை பிரசுரித்திருந்தீர்கள். அதன் வாசகமானது "Music can change the world" - Beethoven என்று வருகிறது. அதாவது 'இந்த உலகை மாற்றும் சக்தி இசைக்கு உண்டு' என்று சொல்கிறீர்கள். பீத்தோவன் என்ற இசைக் கலைஞருக்கு இந்த செய்தி உண்மையாக தோன்றியிருக்கலாம். ஆனால் ஒரு முஸ்லிம் இவ்வாறு எண்ண மாட்டான். இந்த உலகை மாற்றிப் போடும் சக்தி இறை வேதமான குர்ஆனுக்குத்தான் உண்டு. இசை என்பது நமது வாழ்வில் ஒரு அங்கம் அவ்வளவுதான். இசையே வாழ்க்கையாகி விடாது. இசைக்கு அடிமையாகி விடக் கூடாது என்பதால் அதற்கு சில கட்டுப் பாடுகளை விதிக்கிறது இஸ்லாம்.
உங்களின் நண்பர் யுவன் சங்கர் ராஜா சில நாட்களுக்கு முன்பு இஸ்லாத்தை ஏற்றதை அறிவீர்கள். இசையை உருவாக்கி அதில் பல வெற்றியும் கண்டவர் யுவன் சங்கர். 100 படங்களுக்கு மேல் சொந்த இசையால் இளைஞர்களை கட்டிப் போட்டவர். ஆனால் அந்த இசையில் அவருக்கு மன அமைதி கிடைக்கவில்லை. அவருக்கு மன அமைதியைக் கொடுத்தது குர்ஆனின் வசனங்கள் தான். அதனை அவரே பத்திரிக்கை பேட்டியில் சொன்னதை பார்த்தோம்.
'நம்பிக்கைக் கொண்டோரின் உள்ளங்கள் இறைவனின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! இறைவனின் நினைவால்தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன'
குர்ஆன் 13:28
மேற்கண்ட இறை வசனத்தின் மூலம் இறைவன் மன அமைதி பெறுவதற்கு இறைவனைப் பற்றிய நினைவை வழியாகக் காட்டுகிறான். இரு முறை அதனை அழுத்தமாக சொல்வதிலிருந்து குர்ஆனின் வார்த்தைகள்தான் ஒரு மனிதனின் மனதை அமைதிப் படுத்தும். அதற்கு சிறந்த உதாரணம் தான் யுவன் சங்கர் ராஜாவின் மன மாற்றம். எனவே நிரந்தர மன அமைதி இசையால் கிடைக்காது நம்மை படைத்த இறைவனின் வார்த்தைகளால்தான் கிடைக்கும் என்பதை இதிலிருந்து நாம் அறியலாம்.
அடுத்து உங்களின் புதிய ஹிந்தி படமான "HIGH WAY" ல் ஒரு பாடல் வருகிறது. "PATHKHA GUDDI" என்ற பாடலில் 'நாம் ரப்புகா நாம் சாயிகா அலி...அலி...அலி' என்று வருகிறது. இது பஞசாபி பாடல். நான் விளங்கிக் கொண்ட வகையில் முகமது நபியின் மருமகன் அலியை நினைத்து பாடுவதாக நினைக்கிறேன். இந்த படத்தின் டைரக்டர் இம்தியாஸ் அலி ஷியா பிரிவைச் சேர்ந்தவர் என்று நினைக்கிறேன். இதற்கு முந்தய படமான 'ராக்ஸ்டார்' லும் தர்ஹா வணக்கத்தை வலிந்து புகுத்தினார். இந்த படம் இன்னும் வெளியாகவில்லை. அதில் என்ன காட்சிகளை புகுத்தியிருக்கிறாரோ தெரியவில்லை. ஷியாக்கள் கலீபா அலியை மிக உயர்த்தி அபுபக்கர், உஸ்மான் போன்ற கலீபாக்களை மட்டம் தட்டுவர். அவர்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்கள் என்று பொய்யுரைப்பர். தகவல் தொடர்பு அதிகம் இல்லாத அந்த காலங்களில் இஸ்லாமிய எதிரிகள் இடையில் புகுந்து முஸ்லிம்களுக்குள் இரண்டு பிரிவுகளை உருவாக்கி விட்டனர். குர்ஆனிலோ நபி மொழிகளிலோ ஷியா என்ற வார்த்தையே கிடையாது என்பதிலிருந்து இவர்கள் புதிதாக உருவாகிய கூட்டத்தினர் என்பதை விளங்கிக் கொள்ளலாம். இந்த படத்தின் கதையின் நாயகன் அலி என்றும் அதனை பற்றி நீங்கள் பாடுவதாக இருந்தால் நமக்கு ஒரு பிரச்னை இல்லை. ஆனால் கலீபா அலியை உயர்த்தி நீங்கள் பாடுவதாக காட்சி அமைத்திருந்தால் இது போன்ற தவறுகளிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்.
அடுத்து இஸ்லாத்தை சொல்ல எத்தனையோ வழிகள் இருக்க சினிமாவை தேர்ந்தெடுக்க வேண்டாம். ஒரு தொழில் என்ற முறையில் அதில் ஈடுபடுங்கள். இஸ்லாமும் சில கட்டுப்பாடுகளோடு இசையை அனுமதிக்கிறது. இஸ்லாமிய கருத்துக்களை சொல்ல சினிமா பாடல்களை பயன்படுத்த வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வளவு பெறிய கட்டுரையை எழுதிய சுவனப்பிரியன்,இசையை ஹராம் என எவ்விடத்திலும் சொல்லவில்லை.வாழ்க்கையின் ஒருபாகமே இசை,வாழ்க்கையே இசையாகக்கூடாது என்கிறீர்,எங்காயவது இஸ்லாத்தில் இதற்கு ஆதாரமுள்ளதா?எனவே,சொல்வதை அவருக்கு முழுமையாக சொல்லுங்கள்,அவரும் ஒரு புது முஸ்லிமே.பரம்பரை முஸ்லிம்களுக்கே இசை தடுக்கப்பட்டதை அறியாமல் சீரழிந்து கொண்டிருக்கிறார்கள்.
ReplyDeleteஏ.ஆர்.றஹ்மானுக்கு நான் சொல்லும் ஆலோசனை அல்லது பனிவான வேண்டுகோள்-உங்களின் கையில் இருக்கும் மிச்ச ஒலிப்பதிவு வேளைகளை முடிச்சவராக இந்த உலகுக்கே இசைக்கு ஒரு டாட்டா காட்டிவிடுங்கள்.மிகப்பெரும் உலகலவில் மீடியாக்களை வரவழைத்து உங்களின் கைவிடல் முடிவை இஸ்லாத்திற்காக விடுகிறேன் என பகிரங்கப்படுத்துங்கள்,இதனால் இஸ்லாத்தைப்பற்றி தெறியாதவர்களும் தெறிந்து கொள்ள வாய்ப்பும்,நீங்கள் இஸ்லாத்தில் இருப்பதற்கான முழுக்கூலியும் இறைவனால் கிடைக்கலாம்.
("உத்குலு பி சில்மி காஃப்ஃபா-)மார்க்கத்தில் முழுமையாக நுழைந்து கொள்ளுங்கள் என்பது குர்-ஆனின் கட்டளை.இதுதான் உண்மை நிலை.
தொழில் என்பதற்காக ஹராமனா தொழிலை செய்ய முடியாது.இதனை விட,உங்கள் சம்பாத்தியத்திலிருந்து மதுபாண சாலையே திறக்கலாம்,அது தொழில் என்ற வகையில்,ஆனால் முடியாது.உங்கல் மனமே இதற்கு இடமளிக்காது.ஆகையால்,தொழில் என்றில்லாமல்,ஹராம் என்பதால் அது என்ன என்றாலும் கைவிடலே கடமை.உங்களின் ஈமானின் உருதித்தன்மை இதிலேயே தங்கியுள்ளது.
நீங்கள் ஆலோசனை சொல்வதற்கு முன் ஸியாரத் செய்தல் எனும் சுன்னத்தான வழிமுறையை கண்டாலே கப்ர் வணக்கம் என்ற கண்கொண்டு பார்க்கும் வஹ்ஹாபிஸ சிந்தனைப்போக்கை முதலில் நிறுத்துங்கள்.சியாரத் செய்தல் ஒரு போதும் கப்ர்வணக்கமாகாது.சியாரத்தை முத்தமிடுதல் ஒருபோதும் சுஜூதாகாது.ஸஹாபாக்களும் நபிகளாரின் புனித ஸியாரத்தை முத்தமிட்டவர்கள் தான்.குனிந்து முத்தமிடுதல் உங்களுக்கு சுஜூது-சிரவணக்கமாக தென்பட்டால் அது உமது புரிதலிலுள்ள கோளாறே.முத்தமிடுதல்,முகர்தல் போன்றன வணக்கம் என்று சொல்லமாட்டீர்கள் என்று நம்புகிறோம்.அல்லது குனியாமல் எப்படி முத்தமிடலாம் என்றாவது சொல்லித்தாருங்கள்.தயவு செய்து உங்களின் தவறான புரிதலை மக்களுக்கு விதைக்கவேண்டாம்.
ReplyDeleteA.R.rahman னுக்கு ஆலோசனை சொல்லப் புகுந்த சுவனப் பிரியன் முதலில் நீங்கள் இஸ்லாத்தை நன்றாகப் படிங்கள். இஸ்லாம் ஒரு இஸ்லாமியனின் தொழில் எப்படி அமைய வேண்டும் என்று அழகாகக் சொல்லித்தரும் போது . நீங்கள் எப்படி சினிமாவை தொழில் என்ற அடிப்படையில் செய்யலாம் என்று கூறுகின்றீர்கள். (இஸ்லாம் தடை செய்த ஒன்றை எப்படி நீங்கள் ஆகுமாக்க முடியும்) மேலும் இஸ்லாம் சில கட்டுப்பாடுகளோடு இசையை அனுமதிக்கிறது என்று சொன்னீர்கள்.இதற்கு நீங்கள் தகுந்த ஆதாரத்தை தர வேண்டும். இதுவும் நீங்க மார்க்கத்தை நன்றாக விளங்க வில்லை என்பதை காட்டுகிறது. . யாருக்காக வேண்டியும் மார்க்கத்தை மறைக்காதீர்கள்.
ReplyDeleteஇஸ்லாத்தின் பெயரைச் சொல்லி மொத்த முஸ்லீமின் முன்னேற்றத்திற்தும் முட்டுக்கட்டை இட வேண்டாம்.
ReplyDeleteகல்வி கலை எல்லாவற்றையும் புறக்கணித்து கனனி உலகில் இன்னும் எத்தனை காலம் ஐயாமுல் ஜாகிலியாவில் வாழ்வது.? இன்னும் எத்தனை சதாப்தம் நாம் ஆட்டு மந்தைகளாகவும் அடுத்தவர் அடிமையாகவும் வாழ்வது?
Shajahan, Rifan!
ReplyDeleteஇசை ஹராம் என்பதற்கான ஆதாரத்தை தயவு செய்து காட்டுங்கள்
kulikka pooyu seru poosikonda kathaiyayiduchchoo
ReplyDelete