Header Ads



எகிப்தின் இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கம் ராணுவப் பிரிவைத் துவக்கியுள்ளதாக உள்துறை அமைச்சகம் தகவல்

எகிப்து நாட்டின் அதிபர் முகமது மோர்சி கடந்த ஆண்டு ஜூலை மாதம் அந்நாட்டு இராணுவத்தினால் பதவி இறக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாடெங்கும் அமளி நிலவியது. அவருக்குத் துணை நின்ற இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கத்தைத் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவித்த ராணுவம் அந்த இயக்கத்தின் முக்கியத் தலைவர்களையும் கைது செய்து விசாரணையில் ஈடுபடுத்தியுள்ளது. 

இருப்பினும், மோர்சியை மீண்டும் பதவியில் அமர்த்தக் கோரி அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களிலும், கலவரங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்தக் கலவரங்களில் நாடெங்கிலும் தொடர்ந்த வெடிகுண்டுத் தாக்குதல்களுக்கு இஸ்லாமிய இயக்கத்தினரே காரணம் என்று எகிப்தின் இடைக்கால அரசு குற்றம் சாட்டியது. எனினும், அல்-கொய்தா சார்ந்த இயக்கம் பெரும்பான்மையான தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்றது.

இந்த நிலையில், மோர்சி ஆதரவு இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கம் அரசுத் துருப்புகளை தாக்குவதற்காக ராணுவப்பிரிவு ஒன்றினை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகத்தின் தகவல் தொடர்பாளர் ஹனி அப்துல் லதிப் தெரிவித்துள்ளார். இஸ்லாமிய ராணுவப் பிரிவைச் சேர்ந்தவர்களாக 12 பேரைக் குறிப்பிட்ட அப்துல் அதில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒருவரின் ஒப்புதல் வாக்குமூலத்தில் வெளிவந்த தகவலே இதுவென்றும் குறிப்பிட்டார்.

சென்ற மாதம் எகிப்தின் தென்பகுதி மாகாணமான பெனி சூயபில் இஸ்லாமிய இயக்கத்தின் இராணுவக்குழு தங்கள் மாகாணத் தலைமையின் கீழ் ஐந்து காவல்துறையினரை அவர்கள் தங்கள் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது சுட்டு வீழ்த்தியுள்ளதாகவும் அப்துல் லதிப் தெரிவித்துள்ளார். 

1 comment:

  1. நல்ல விடயம்தான்.இலங்கையிலும் இனவாதிகளுக்கு எதிராக முஸ்லிம்களும் இப்படி ஒன்றைத் தொடங்கலாமே

    ReplyDelete

Powered by Blogger.