Header Ads



காதல் கடிதம் எழுதுவதுபோல் அரசாங்கம் எம்மை ஏமாற்றிவிட்டது - சிங்கள ராவய

மாடறுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிங்கள ராவய பௌத்த அமைப்பினால் முன்னெடுத்துவரும் எதிர்ப்புப் போராட்டம் 4 வது நாளாக மேற்கொள்ளப்பட்டது.  நாட்டில் மாடறுப்பதனை உடனடியாக நிறுத்தாவிடின் எமது சத்தியாக்கிரக போராட்டம் தொடர்வதோடு உயிர்த்தியாகத்தை செய்யவும் தயார் எனவும் சிங்கள ராவய அமைப்பு எச்சரித்துள்ளது.
    
இது தொடர்பில் சிங்கள ராவய பௌத்த அமைப்பின் தலைவர் ஹக்மீமன தயாரத்தன தேரர் தெரிவிக்கையில்,

அரசாங்கம் தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் எம்மை ஏமாற்றிவிட்டது. எமது கோரிக்கைகள் ஜனாதிபதிக்கு நகைச்சுவையாக மாறிவிட்டது. நாம் குறிப்பிடுவது இந்த நாட்டின் பாரம்பரியத்தினை காப்பாற்றும் விடயம். இன்று நாட்டில் முஸ்லிம் தீவிரவாதிகள் பௌத்த கொள்கையினையும், நாட்டின் தொண்மையினையும் அளிக்கும் வகையில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அரசாங்கம் அவை தொடர்பில் கவனம் செலுத்தாதுள்ளது. நாட்டில் தமிழர் தொடர்பில் பிரச்சினைகள் ஏற்படும்போது சர்வதேச அளவில் குறள் கொடுக்கின்றனர். முஸ்லிம்கள் தொடர்பில் மத்திய கிழக்கு நாடுகள் குறள் கொடுக்கின்றது. ஆனால் சிங்களவர்களுக்கு ஒன்றென்றால் யாரும் வருவதில்லை. அரசாங்கம் கூட எமக்காக குறள் கொடுக்க முன்வரவில்லை.

இந்நாட்டு பௌத்தர்களை யார் காப்பாற்றுவது. எமக்காக யார் குறள் கொடுப்பது. எமத இனம் இன்று எவராலும் மதிக்கப்படாத இனமாக மாறிவிட்டது. சிங்கள அரசாங்கம் கூட சிங்களவர்களை கவனத்திற் கொள்ளவில்லை. இன்று நாம் விடுத்துள்ள கோரிக்கைக்கு காதல் கடிதம் எழுதுவதுபோல் அரசாங்கம் பதில் தெரிவித்துள்ளது. அரசாங்கம் பொருப்பில்லாது செயற்படுமாயின் உடனடியாக ஆட்சியினை விட்டுவிட்டு பௌத்தத்தினை நேசிக்கும் நபருக்கு ஆட்சியமைக்க அனுமதிக்க வேண்டும்.

இன்று எமக்கான தீர்வு கிடைக்கப்பட வேண்டும். அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் கால அவகாசம் வழங்கப்பட முடியாது. எமக்கு இன்று ஒரு தீர்வு இல்லையேல் நாம் எமது உயிர்களை பௌத்தத்திற்காக தியகம் செய்வோம். இவ்விடத்திலே தீக்குளிப்போம் எனவும் அவர் தெரிவித்தார். 

3 comments:

  1. சிங்கள ராவயவிடம் ஓர் வேண்டுகோள்...
    பின்வரும் லின்க்கில் உள்ளது போன்று இருக்கின்ற அனைத்து தேரர்களையும் நல்வழிப்படுத்திவிட்டு அதன் பின்னர் உங்கள் ஆர்பாட்டங்களையும், தியாகங்களையும் மேற்கொள்ளுங்கள். இல்லாவிடில் பௌதத்தை ஆதரிக்கும் நீங்கள் உங்களையே அசிங்கப்படுத்திக்கொள்வது போல் இருக்கும்,
    http://www.jaffnamuslim.com/2014/02/blog-post_7054.html

    ReplyDelete
  2. ஹலோ தேரர்களே,உங்கள் ஆட்டம் எதுவும் நடக்காது,வேண்டியவர்கள் வேண்டியளவுக்கு பெற்றோல் ஊற்றி தீக்குளிக்க தயாராகுங்கள்.

    இலங்கைக்கு எதிரான ஜெனீவாவின் பிரேரனையை வெல்ல வைக்க,இப்போ ஐ.நா.இலங்கையில் நடக்கும் சிருபாண்மை மக்களுக்கு எதிரான அடக்கு முறைகள்,அவர்களின் மதஸ்தலங்களின் தாக்குதல்கள் எல்லாவற்றையும் அறிக்கையில் இடைச்செருகி முஸ்லிம் நாடுகளின் வாக்குகளையும் வாங்கிக்கொள்ள முயட்சி செய்து வருகிறது,அதுவே பெரும் குழப்பத்தை இலங்கைக்கு புதிதாய் ஏற்படுத்தி இருக்கிறது.

    ஒருவேளை,மாமா இதனை ஆதரித்து மாடருப்புக்கு எதிராக ஏதும் செய்தால்,அதுவும் நாளைய ஐ.நா.வின் அறிக்கையில் சுடச்சுட இடம்பெறும்.உங்களுக்கெல்லாம் நேரம் காலம் தெறியாது.எந்நேரம் எதை எங்கு கேட்கனும் என்ற புத்தியே இல்லை.

    தலையிடி தாங்காமல் மாமா உங்களை எல்லாம் சுட்டுத்தள்ளும்படி சூட்டிங் ஓர்டெர் போட்டலும் போடுவார்,கவணம்டி.

    ReplyDelete

Powered by Blogger.