Header Ads



கோத்தபய ராஜபக்ஸ கலந்துகொண்டமைக்காக மன்னிப்பு கேட்கிறேன் - உதய கம்மன்பில

மேல் மாகாணசபையில் போட்டியிடும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் உதய கம்மன்பில, தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

தேர்தல் பிரச்சார ஆரம்ப நிகழ்வுகளில் அரச அதிகாரியான பாதுகாப்புச் செயலாளரை பங்கேற்கச் செய்தமைக்காக அவர் இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளார்.

பாதுகாப்புச் செயலாளர் பதவியானது ஒர் அரசியல் ரீதியான நியமனமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்பதற்கான சகல உரிமையும் கோதபாய ராஜபக்ஷவிற்கு காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், தேர்தல் ஆணையாளர் இதனை தேர்தல் விதி மீறலாகக் கருதுவதாகவும் இதனால் தாம் மன்னிப்பு கோருவதாகவும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

1978ம் ஆண்டு அரசியல் சாசனத்தின் அடிப்படையில் அமைச்சின் செயலாளர் அரசாங்க அதிகாரிகள் அல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைச்சின் செயலாளர்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதனை தடுக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு பாதுகாப்புச் செயலாளரை ஈடுபடுத்தியமை தவறு என தேர்தல் ஆணையாளர் கருதுவதாகவும் இதனால் தாம் மன்னி;ப்பு கோரியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கசினோ சூதாட்ட நிலையங்களை அமைக்க வேண்டுமென கோதபாய ராஜபக்ஷ கருதவில்லை என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

சட்டத்தரணியும், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான ஸ்ரீனாத் பெரேரா உதய கம்மன்பில மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ ஆகியோரின் நடவடிக்கைகளுக்கு கடுமு; எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.

இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் உதய கம்மன்பில கருத்து வெளியிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.