ஆசாத் சாலிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை...?
(நஜீப் பின் கபூர்)
மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் கண்டியில் கடந்த மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்டு நுவாக் கட்சியின் தலைவர் ஐ.தே.கட்சியின் முதன் நிலைக்கு வந்தார்.
யார் இந்த அசாட் சாலிக்கு அதிக வாக்குகளைக் கொடுத்து இந்த வெற்றியைக் கொடுத்தார்களோ இப்போது அதே கண்டிப் பிரதேசத்தில் அசாட் சாலிக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சிக்காரர்கள் போர்க் கொடி தூக்கி இருப்பதை அவதானிக்க முடிகின்றது.
இன்னும் ஓரிரு தினங்களில் அசாட் சாலிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரோரனையொன்று கண்டி பூஜாப்பிட்டிய பிரதேச சபையில் கொண்டு வரப்பட இருக்கின்றது என்று எமக்கு நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தெரிய வந்திருக்கின்றது. ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் அந்தப் பிரேதேச சபையிலுள்ள ஒரு முஸ்லிம் உறுப்பினர் கொண்டுவரவுள்ள இந்த நம்பிக்கை யில்லாப் பிரேரணைக்கு ஆளும் தரப்பு உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக சொல்லப்படுகின்றது.
மேல், தென் மாகாணங்களில் போட்டியிடுவதற்கு தனது சகாக்களுக்கு வேட்பு மனு கேட்டு அதற்கு ஐக்கிய தேசியக் கட்சி இணங்காத காரணத்தால் அசாட் சாலி நடைபெறுகின்ற தேர்தலில் தனது கட்சி ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிக்க மாட்டாது என்ற செய்த அறிவிப்புதான் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரனையில் அடிப்படை என்று தெரியவருகின்றது.

இவரும் சராசரி அரசியல்வாதிதானஂ.கொழும்பு வாய்தானஂ
ReplyDelete