Header Ads



டென்மார்க் மேற்கொள்ளும் இஸ்லாமிய எதிர்ப்புணர்வு..!


(சுவனப்பிரியன்)

ஐரோப்பிய கண்டத்தில் ஸ்கேண்டினேவிய குழுமத்தில் வரும் நாடுகளில் ஒன்றான டென்மார்க் எப்போழுதுமே இஸ்லாத்துக்கு எதிரான கொள்கை எடுப்பதில் ஒரு அலாதி பிரியம் கொண்டுள்ளது. இதுவரை இஸ்லாம் காட்டும் வழி முறையில் ஆடு, மாடு, கோழிகளை அறுத்து உள்நாட்டுக்கும் வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வந்தது. திடீரென்று இஸ்லாத்துக்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டும் என்ற அரிப்பெடுக்கவே தற்போது மின்சார அதிர்வு கொடுத்து அந்த உயிர்களை கொல்லப் போகிறதாம். இஸ்லாமிய முறைப்படி அறுத்தால் அந்த உயிர்கள் அதிகம் இம்சையை உணராது. ரத்தமும் வெளியேறி விடும். மனிதனுக்கு எந்த உபாதையும் தராது என்று உலக சுகாதார வல்லுனர்கள் முன்பே ஒத்துக் கொண்டும் தேவையில்லாத பிரச்னையை உண்டு பண்ணுகிறது டென்மார்க. முகமது நபியின் கேலிச் சித்திரங்களை முன்பு வெளியிட்டு உலகம் முழுவதும் இருந்து எதிர்ப்பை சம்பாதித்து மிகப் பெரிய பொருளாதார பின்னடைவை ஏற்படுத்திக் கொண்டது. தற்போது ஹலால் பிரச்னையை கையில் எடுத்துள்ளது.

ஃபவாத் தவ்ஃபீக் என்ற மார்க்க அறிஞர் தனது செய்தியாக 'இஸ்லாம் காட்டும் முறையில் மிருகங்களை அறுப்பது அவற்றிற்கு அதிக சிரமத்தையும் கொடுக்காது. மனிதர்களுக்கு எந்த தீங்கும் இதனால் ஏற்படாது என்று பல அறிவியல் ஆய்வுகள் நிரூபித்துக் காட்டியுள்ளன. மின்சார அதிர்வின் மூலம் கொல்வது மருத்துவ அறிக்கைக்கும் எதிரானது. இஸ்லாமிய நாடுகள் டென்மார்க்கிலிருந்து பதப்படுத்தப்பட்ட உணவுகளை இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும்' என்கிறார்.

டாக்டர் ஜாகிர் நாயக் தனது அறிக்கையில் 'இறந்த உடலில் தங்கி விடும் ரத்தத்தில் நச்சுப் பொருட்களும் பாக்டீரியாக்களும் உறைந்து விடுவதால் அது மனிதனுக்கு கேடு விளைவிக்கிறது. இஸ்லாமிய முறைப்படி அறுப்பதே சிறந்த முறை' என்கிறார்.

டென்மார்க் அரசானது உலகின் இந்த எதிர்ப்பை சமாளிக்க டேன் ஜார்ஜன்ஸன் விட்டு சமாளிக்க வைத்துள்ளது. இவர் அந்நாட்டு உணவு அமைச்சர். 'நாங்கள் ஹலால் முறையில் அறுப்பதை எதிர்க்கவில்லை. தடையும் செய்யவில்லை. இன்றும் பல இடங்களில் ஹலால் முறையிலேயே அறுக்கப்படுகிறது' என்கிறார்.

டென்மார்கில் இஸ்லாமியர்கள் சிறுபான்மையினராக உள்ளனர். 3.7 சதவீதம் மக்கள் இந்நாட்டில் இஸ்லாத்தை தங்கள் வாழ்வியலாக கொண்டுள்ளனர். இஸ்லாம் இந்நாட்டில் வளருவதை தடுக்கும் முகமாக இது போன்ற சீண்டல்களை அவ்வப்போது இந்நாடு அரங்கேற்றுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. எங்கெல்லாம் எதிர்ப்புகள் வலுக்கிறதோ அங்குதான் இஸ்லாம் வேகமாக பரவியதாக வரலாறு!

தகவல் உதவி
 அரப் நியூஸ்

No comments

Powered by Blogger.