கொழும்புக் குப்பை புத்தளம் வருகின்றது - விழிப்பாக இருக்க வேண்டுகோள்...!
(நஜீப் பின் கபூர்)
கொழும்புக் குப்பை கொலன்னாவைப் பிரதேசத்திற்கு எடுத்து வந்து கொட்டப்படுவதற்கு எதிராக அண்மையில் அங்குள்ள சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து வீதியில் இறங்கிப்; போராடியதன் விளைவாக இது விடயத்தில் தலையிட்ட அரசியல்வாதிகள் அதற்கு ஒரு தீர்வை முன்வைத்திருக்கின்றனர்.
இந்தத் திட்டத்தின் கீழ் இந்த குப்பைகள் தற்போது புகையிரதம் மூலம் கொழும்பிற்கு எடுத்து வந்து கொட்டப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. எனவே இது விடயத்தில் புத்தளம் வாழ்கின்ற மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நாம் அவர்களைக் கேட்டுக் கொள்கின்றோம்.
புத்தள நகரம் தற்போது கவர்ச்சிகரமாக மாற்றடைந்து வருகின்றது. உல்லாசப் பிரயாணிகளைக் கவர்ந்திழுக்கக்கூடிய இடமகாக புத்தளம் தற்போது இனம் காணப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் புத்தள மண்னைக் குப்பை கொட்டுமிடமாகத் தெரிவு செய்திருப்பதை அங்குள்ள மக்கள் எவ்வளவு தூரம் ஏற்றுக் கொள்ளவார்கள் என்பது அப்பிரதேசத்திலுள்ள அரசியல்வாதிகள் சுற்றுச்சூழ ஆர்வலர்கள் வெகுஜன இயக்கங்களின் கைகளில் தங்கி இருக்கின்றது.

There is wrong sentence in the news please review it and correct the word. Instead of Puttalam editor used Colombo.
ReplyDeleteplease make sure