இலங்கை முஸ்லிம் கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்திற்கு..!
(Shareefdeen)
இஸ்லாமிய நெஞ்சங்களே! விஷேசமாக வாலிபர்களே! எமது தாய் நாடு இலங்கை. முஸ்லிம்களைப் பற்றி தவறான பல்வேறு கருத்துக்கள் மாற்று மதத்தினரிடம் ஊடுறுவியுள்ள நிலையில், தற்போது 12 ஆவது ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. எனவே கால நிலையைக் கருத்திற்கொண்டு புத்தியும் நிதானமுமுள்ளவர்களாக நடக்க வேண்டியது இன்றைய அவசியத் தேவையாகும்.
எவ்வளவுதான் முஸ்லிம்கள் பற்றி கசப்புணர்வுகளை பௌத்த மதத்தினர்களுக்குள் திணிப்பதற்காக பல்வேறு தீவிரவாத இயக்கங்கள் முயற்சித்த போதும் எம் மீது நல்லெண்ணம் கொண்டு எமக்காகக் குரல் கொடுக்கும் பௌத்த மத அமைச்சர்கள், பாமரர்களுக்கு அப்பால் பௌத்த மத குருமார்களே இருப்பதை நாம் மறந்து விடலாகாது. விளையாட்டின்போது நாம் யாரையும் ஆதரிக்கலாம். அது தனி நபர் உரிமை தான்.
ஆனால் அவ்வுரிமையை முறை தவறிப் பாவித்து சகல மதத்தவர்களும் இந்நாட்டில் ஒற்றுமையாக வாழ வேண்டும் என நினைக்கும் நல்லுள்ளம் படைத்த நல்லவர்களின் உள்ளத்தில் நாட்டுப் பற்று அரவே அற்றவர்களே முஸ்லிம்கள் என்று சித்திரம் வரைய நாமே காரணமாக அமைந்துவிடக்கூடாது.
அமைதியைக் கடைப்பிடித்து தேவையற்ற பிரச்சினைகளைத் தவிர்ப்போம். பிற நாடொன்றை நேசிப்பதாக இருந்தாலும் அதனைத் தனிப்பட்ட ரீதியில் அமைத்துக் கொள்வோம். பணத்தை வீண்விரயம் செய்து பட்டாசு கொளுத்துவது இஸ்லாத்தின் அடிப்படையில் பொதுவாகவே ஹராமாகும்.
எனவே அதனை முற்றாகத் தவிர்ப்போம். மார்க்கத்திற்கு முரணான முறையில் நாட்டுப் பற்றை பிற மதத்தவர்களுக்கு மத்தியில் வெளிக்காட்டாது மார்க்கத்தில் தடை செய்யப்படாத முறையில் நடந்து கொள்ள உறுதிகொள்வோம்.

oor nalla yosanai nanri
ReplyDeleteஆம் முதலில் சொந்த நாடு. சரியான நேரத்தில் தக்க யோசனை. குறைந்தது பாகிஸ்தான் காரனுக்கு பிறந்திருந்தாலாவது பரவாயில்லையென்று சொல்லலாம்.
ReplyDelete@Hasan Husain i think you have some problem with Pakistani. I’m also living in dubai more than 4 years. They are loving and caring Srilankan Muslims and I have more than 9 Best friends from Pakistan, what a nice people. Always I praying that Ya Allah we have to be in Jannah together... also we cannot say all SL muslims are good. Likewise some may be bad for you but don’t misunderstand All Pakistani.
ReplyDeleteI know as well Last 6 months ago our company has been terminated one SL muslim and now he doesn’t have Job in SL. But his friend Pakistani sending for his family expenses every month. Will you believe?????????
even we cannot say all SL muslims are good. as same some may bad for you but don’t misunderstand Pakistani.