தென் கொரியாவில் தொழில் வாய்ப்பைப் பெற 'ஒன்லைன்' மூலம் கொரிய மொழிப் பரீட்சைக்கு தோற்றுதல் காட்டாயம்
(எம்.எம்.ஏ.ஸமட்)
தென் கொரியாவில் தொழில் வாய்ப்பைப் பெறுவதற்காக 'ஒன்லைன்' மூலம் கொரிய மொழிப் பரீட்சைக்கு தோற்றுதல் காட்டாயமாக்கப்படவுள்ளது.
இது குறித்து இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளதாவது,
இரண்டாம் முறையாகத் தென் கொரியாவில் வேலை வாய்ப்பைப் பெற விரும்புபவர்கள் கொரிய மொழித் திறமையைப் பரீட்சிப்பதற்காக ஒன்லைன் மூலம் பரீட்சைக்குத் தோற்றுவது எதிர்காலத்தில் கட்டாயமாக்கப்படவுள்ளது.
தென் கொரியாவில் முதல் தடவைத் தொழில்வாய்ப்புப் பெற்றவர்கள் இரண்டாம் முறையும் தொழில் வாய்ப்பைப் பெறச் செல்லுவதற்கு இந்நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
வெளிநாட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதில் கொரிய அரசாங்கத்தினால் நடைமுறப்படுத்தப்பட்டுள்ள தொழில்வாய்ப்பு அனுமதிச் சட்டங்களுக்கமைய கொரிய மொழியில் தகைமை பெற்றிருப்பது அவசியம். இதன் நிமித்தம் இலங்கையிலிருந்து வேலைவாய்ப்பு பெற்று கொரியாவிற்குச் செல்வோர் கொரிய மொழியில் பரீட்சயம் பெற்றிருப்பது அவசியமாக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் கொரியாவிற்கு வேலைவாய்ப்புச் பெற்றுச் செல்லும் சகல இளைஞர்களையும் ஒன்லைன் ஊடாக கொரிய மொழிப் பரீட்சைக்குத் தோற்றச் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக பணியகம் சுட்டிக்காட்டுகிறது.
இதன்பொருட்டு, 2 இலட்சம் அமெரிக்க டொலர் நிதியில் கொரிய மனித வள திணைக்களத்தினால் கொரிய மொழிப் பரீட்சை நிலையமொன்று பன்னிப்பிட்டியவில் நிறுவப்பட்டுள்ளது. இதில் கொரிய மொழியை தங்கியிருந்து கற்ற முடியும் எனக் குறிப்பிட்டுள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் 26 ஆயிரம் இலங்கையர் கொரியாவில் தொழில் புரிவதாகவும் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
Post a Comment