Header Ads



கல்முனை பொதுமக்கள் உதுமாலெப்பையிடம் விடுக்கும் வேண்டுகோள் (படங்கள்)

(ஏ.பி.எம்.அஸ்ஹர்)

கல்முனை எம்.ஸி.அஹ்மட் வீதி மிக நீண்ட காலமாக திருத்தப்படாமல் உள்ளதாக பிரதேச வாசிகள் விசனம் தெரிவித்துள்ளனர். மழை காலங்களில் இவ்வீதியால் போக்குவரத்துச்செய்ய முடியாதுள்ளது. கல்முனை மஹ்முத் கல்லுாரியையும் பிரதான வீதியையும் இணைக்கும் வீதியாக உள்ள இவ்வீதியை மிகவிரைவில் புனரமைத்தத்தருமாறு பொதுமக்கள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

இந்நிலையில் கிழக்கு மாகாண வீதி அமைச்சர் உதுமாலெப்பை இதுகுறித்து கவனம் எடுப்பாரென்பது  மக்களினதும், ஜப்னா முஸ்லிம் இணையத்தினதும் நம்பிக்கை.





No comments

Powered by Blogger.