Header Ads



தங்கத்தின் விலை அதிகரித்தது

உலக சந்தையில் தங்கத்தின் விலை வாரயிறுதியில் அதிகரித்துள்ளது.
ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை நேற்று உலக சந்தையில் 1321 டொலர்களாக உயர்ந்துள்ளது.

கடந்த நொவெம்பர் மாதம் 7 ஆம் திகதிக்கு பின்னர் இது மிக கூடிய அதிகரிப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளியின் விலையும் கடந்த மூன்று மாதங்களில் அதிகரித்த விலையை கண்டிருப்பதாக சர்வதேச வர்த்தக தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலகின் மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட சீனா மற்றும் அமெரிக்கா நாடுகளில் ஏற்பட்டுள் கேள்வியே தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகரிப்புக்கு காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.

பாதுகாப்பான செலாவணியாக இருந்த டொலரின் பெறுமதி நலிவடைந்தமையும் இதற்கான காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.