Header Ads



பாகிஸ்தான் பல்கலைக்கழகத்தில் காதலர் தினம் கொண்டாடிய மாணவர்களிடையே மோதல்

பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள பெஷாவர் பல்கலைக்கழகத்தில் காதலர் தினம் நடைபெற்றது. அப்போது, உற்சாகமாக ஆடிப்பாடிக்கொண்டிருந்த மாணவர்களிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. 
ஒருவரையொருவர் தாக்கியதுடன், துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டது. பல்கலைக்கழகத்தின் விடுதியின் அறைகளை அடித்து நொறுக்கி தீ வைத்தனர். இதனால் அந்த இடமே போர்க்களம் போல் காட்சியளித்தது.

பல்கலைக்கழக நிர்வாகத்தினர், நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாணவர்களை கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர். ஆனால், அவர்கள் மீது ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் மாணவர் அமைப்பினர் கற்களை வீசி தாக்கினர்.

இந்த மோதலில் ஒரு மாணவர் காயம் அடைந்தார். மோதலுக்கான காரணம் குறித்து விசாரிக்க பல்கலைக்கழகம் குழுவை அமைத்துள்ளது.

No comments

Powered by Blogger.