Header Ads



முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்த எனக்கு, பொது பலசேனா கொலை அச்சுறுத்தல் விடுத்தது - விஜித தேரர்


(Vi) முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்து வரும் உறுப்பினர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்து வரும் பொதுபலசேனா போன்ற இனவாத அமைப்புகள் இந்நாட்டில் இருக்கும் வரை சிறுபான்மையினரின் உயிருக்கு எந்தவொரு உத்தரவாதமும் இருக்காது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தம்புள்ளை பிரதேச சபை உறுப்பினரான விஜித தேரர் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில்,

முஸ்லிம் மக்களுக்காக குரல் கொடுத்த எனக்கு ஆளுங்கட்சி உறுப்பினர் என்றுகூட பார்க்காது பொது பலசேனா கொலை அச்சுறுத்தல் விடுத்தது.  இந்த அச்சுறுத்தலுக்கு பயந்து சுமார் 6 மாத காலமாக தலைமறைவாகவே வாழ்ந்து வருகின்றேன். 

எனக்கு கொலை அச்சுறுத்தல் விடுப்பதாகக் கூறி பொது பல சேனாவுக்கெதிராக மனித உரிமைகள் ஆணையகத்திடம் முறைப்பாடொன்றை செய்ததுடன் அவ்வமைப்பை தடைசெய்யுமாறு கோரி மனுவொன்றையும் கையளித்தேன். ஆனால், இதுவரை காலமும் இதற்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. 

இதனையடுத்து இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து பொலிஸாரிடம் தஞ்சமடைந்தேன். என்னைப் பொறுத்தவரை இந்நாட்டில் சிறுபான்மையினருக்காக குரல் குடுப்பவர்களுக்கு பாதுகாப்பே இல்லை. ஆளுக்கட்சி உறுப்பினராக இருந்தும்கூட பொதுபலசேனாவுக்கு அஞ்சி சுமார் 6 மாத காலமாக தலைமறைவாகவே வாழ்ந்து வருகின்றேன். 

எனக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி ஜனாதிபதியிடமும் முறையிட தொடர்புகொள்ள முயற்சித்தபோது அதற்கான சரியான தருணம் எனக்கு அமையவில்லை. எனவே,இது தொடர்பில் அரசு கவனம் செலுத்தி பொது பலசேனா போன்ற இனவாத அமைப்புகளின் செயற்பாட்டை தடுத்து நிறுத்த வேண்டும் என்றார். 

2 comments:

  1. முஸ்லீம்களுக்காக குறல் கொடுத்த மதிப்புக்குறிய விஜித தேரர்கள் அவர்களுக்கு நாம் எப்போதும் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும்.....! அதே நேரம் எமது மேன்மைக்குறிய தலைவர்களான கௌரவ பௌசி அஸ்வர் காதர் ரவுப் ஹக்கீம் மற்றும் ஹிஸ்புல்லா போன்றவர்களை பார்த்து இந்த விஜித தேரர் அவர்களும் 'மௌனத்தை' கடைபிடித்திருந்தால் .... இப்படி தலைமறைவாக இருக்கவோ அல்லது கொலை மிரட்டல் போன்ற அச்சுருத்தலுக்கோ ஆளாகியிருக்க மாட்டார் என்பதையும் நாம் தெறிந்து கொள்ளவேண்டும்.

    ReplyDelete
  2. இவரோடு சம்பந்தப்பட்ட முஸ்லிம்கள் இவரின் உயிராபத்தைக் கருதி இவருக்கு இஸ்லாத்தில் இணைந்து ஒரு முஸ்லிம் பெண்ணோடு வாழ்க்கை நடாத்தக் கோருவது நல்லதல்லவா! மார்க்கத்தைத் திணிக்கக்கூடாது. ஆனால் முறையாக எடுத்துச் சொல்வதில் தவறேதும் இல்லையே. முஸ்லிம்களுக்காகக் குரல் கொடுத்து அநியாயக் காரர்களால் கொலையுண்டால் இவரின் நிலை பரிதாபமல்லவா! வாய்ப்புள்ளவர்கள் அவருக்கு முறையாக அறிவுருத்தி தன்னிகரற்ற நன்மையை அடைய முயற்சி செய்வார்களாக. அல்லாஹ் நாடியவர்களுக்கு நேர்வழி அளிப்பான். யாராலும் தடுக்க முடியாது.

    ReplyDelete

Powered by Blogger.