இந்திய வீட்டுத்திட்டத்தை யாழ் முஸ்லீம்களிற்கு பெற்றுக் கொடுக்க அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டும்
இந்திய வீட்டுத்திட்டத்தை யாழ் முஸ்லீம்களிற்கு பெற்றுக் கொடுக்க அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டும் என யாழ் கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் அல் அஸ்கர் முன்பள்ளி ஸ்தாபகரும் சமூக சேவகருமான கே.எம் நிலாம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரவித்துள்ளதாவது,
எமது நாட்டில் தற்போது சமாதான சூழல் மலர்ந்து வருகின்றது.கடந்த கால அனர்த்தங்களால் எமது நாட்டின் மக்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் பாதிப்புற்றனர்.தற்போத இயன்றவரை தற்போதைய அரசாங்கம் அம்மக்களுக்கான நஸ்டஈடு மற்றும் சேவைகளை வழங்கி வருகின்றது. ஆனால் கடந்த 1990 ஆண்டு முதல் பாதிப்புற்ற யாழ் முஸ்லீம்கள் எது வித முன்னேற்றமும் இன்றி தாங்கள் வாழ்ந்த மண்ணிற்கு மீளவும் குடியமர முடியாமல் உள்ளனர்.
இதற்க காரணம் அம்மக்களை நான் அறிந்த மட்டில் அவர்களை சரியாக சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் புரிந்துகொள்ளவிலலை. ஏனெனில் அன்று முதல் இன்று வரை சர்வதேச ,உள்ளுர் தொண்டு நிறுவனம் செய்த உதவிகள் இவர்களை கவனிக்கவில்லை. சிலர் கூட அகதிப்பட்டத்தை தற்போது வரை சுமக்கின்றனர்.
இது மாற்றப்பட வேண்டும்.சகல மக்களும் சமத்துவமாக வாழ அவர்களுக்கு அனைத்து தரப்புகளும் வேற்றுமைகளை மறந்து உழைக்க வேண்டும். எமது நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நாட்டின் சிறந்த நிர்வாக தலைவராக உள்ளார்.இவரது நல்லெண்ணத்தை பலர் புரிந்து கொள்ளாமல் ஜெனிவா தீர்மானம் சர்வதேச போர்க்குற்றம் என மக்களை குழப்பிக்கொண்டு இருக்கினறனர்.
அவரது நோக்கம் ஓரே நாடு .ஒரு தேசம்.அனைத்து மக்களும் ஒற்றுமையுடனும் சந்தோசமாக வாழ வேண்டும் என்பது அவரது நோக்கம். யுத்தம் நிறைவடைந்து 4 வருடம் கடந்த பின்னர் வட மாகாணத்தில் பல்வேறு பகுதிகளில் மீள்குடியேற்றம் இடம்பெற்று அப்பகுதி மக்கள் வழமையான இயல்பு வாழ்ககைக்கு திரம்பிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் யாழ் முஸ்லீம்கள் இது வரை மீள்குடியெற எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
2009 ஆண்டு இடம்பெயரந்த ஏனைய பிரதேச மக்கள் மீளக்குடியமர்ந்து விட்டனர். ஆனால் 1990 ஆண்டு விரட்டப்பட்ட யாழ். முஸ்லீம் மக்கள் இன்னும் மீளக்குடியமரவில்லை.அமர்த்தப்படவில்லை. இவர்கள் ஹதீஜா பாடசாலையிலும்,பொம்மைவெளி கிராமத்திலும் இன்று வரை அகதிகளாகவே உள்ளனர்.இவர்களுக்கான அடிப்படை வசதிகள் என்ன உள்ளது.வந்த பார்த்தால் உரிய தரப்பினரக்கு தெரிய வரும்.ஆனால் அம்மக்களின் பெயரால் அரசியல் செய்யும் தரப்பினர் அதிமாக இங்குள்ளனர்.
இவர்கள் விடயத்தில் ஏன் இதுவரை அக்கறை செலுத்தப்படவில்லை.வாக்கு வங்கி குறைந்த சமூகமாக யாழ் முஸ்லீம்கள் உள்ளனரா? இவ்வாறு பாரபட்சமாக நடப்பது ஒரு ஜனநாயக நாட்டில் எங்கும் இல்லை. எனது கருத்துப்படி இம்மக்களின் முன்னேற்றத்திற்க ஒரு சில அமைப்புகளும் தரப்பினரும் தான் காரணம் என அறியமுடிகிறது.
யாழ் முஸ்லீம்கள் இலங்கை மக்கள் இல்லையா ,அதுமட்டுமன்றி தற்போது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் இந்திய வீட்டுத்திட்டம் 4 ஆம் கட்டம் கடந்தும் இதுவரை ஒரு வீடு கூட யாழ் முஸ்லீம்களுக்கு கட்டிக்கொடுக்கப்பட வில்லை. இது குறித்து முஸ்லீம் அமைச்சர்களும் மௌனமாக இருக்கின்றனமை கவலை அளிக்கின்றது. நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் கூட யாழ் மாவட்டத்திற்கு பல தடைவ விஜயம் செய்துள்ளார்.
இதவரை அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டு அதற்கு எதுவித நிவாரணமும் பெற்றுக்கொடுக்கவில்லை. இத தவிர தற்போது உலக முஸ்லீம் தலைவர்களில் 500 பேரில் ஒருவராக உள்ள அமைச்சர் ரிசாட் பதியுதீன் 2010 ஆண்டு யாழ் மாவட்டத்திற்கு வந்த பின்னர் இதுவரை அப்பகுதி மக்களை இன்னும் பார்க்கவில்லை. என அப்பகுதி மக்கள் கவலைப்படுகின்றனர்.
தற்போது 13 பள்ளிவாசல்கள் உள்ள இப்பகுதியில் முழுமையாக மக்கள் மீளக்கடியமரவில்லை. தற்போது மீளக்குடியமர வருபவர்கள் கூட சில நாட்கள் இப்பகுதியில் தங்கிவிட்டு மீளவம் பழைய இடம்பெயர்நத இடத்திற்கு செல்கின்றனர்.
இவ்வாறு சென்றால் மீள்குடியர்வு எவ்வாறு சாத்தியம் பெறும்.அண்மையில் வட மாகாண ஆளுநர் வடக்கில் மீளக்குடிறே;றம் நிறைவடையும் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.ஆனால் 20 ஆயிரத்திற்க அதிகமாக 1990 ஆண்டு இருந்த யாழ் முஸ்லீம்கள் இன்று 2000 க்க குறைவாகவே உள்ளனர். எனவே இவ்வாறு அரச தலைவர்களால் பரப்பப்படும் அறிக்கைகள் எதுவித அடிப்படையும் இன்றி வெளியிடப்படுகினற்து.இதனால் எமத மக்கள் கவலை அடைந்துள்ளனர்.
எனவே யாழ் முஸ்லீம்கள் மீளக்குடியமர இந்திய வீட்டுத்திட்டத்தையாவது பெற்றுக்கொடுக்க அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment