Header Ads



கொழும்பு அமெரிக்கத் தூதரம் முன் யானைகளுடன் வந்த பௌத்த பிக்குகள், தேங்காய்களை உடைத்து போராட்டம்


ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்னால், யானைகளுடன் வந்த பௌத்த பிக்குகள், தேங்காய்களை உடைத்து எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தினர். 

கோட்டே, கங்காராமய விகாரையின் பௌத்த பிக்குகள் குழுவொன்றும், விகாரைக்கு வரும் பக்தர்களும் இணைந்து  நேற்று அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்னால், காலி வீதியில் பெருமளவு தேங்காய்களை உடைத்ததால், அந்த வீதி ஊடான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. 

கங்காராமய விகாரையில் நடைபெற்ற நவம் பெரகரவுக்காக கொண்டு வரப்பட்டிருந்த பெருமளவு யானைகளும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றன.

இந்தப் போராட்டத்தை நடத்தியவர்களால் அமெரிக்கத் தூதரகத்திடம் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது. 

இந்தப் போராட்டத்தினால், கொள்ளுப்பிட்டி தொடக்கம் காலி முகத்திடல் வரையிலான வீதிபோக்குவரத்துக்காக தடை செய்யப்பட்டது. 

அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்பாக உடைக்கப்பட்ட தேங்காய்களை, அந்தப் போராட்டத்துக்காக கொண்டு செல்லப்பட்ட யானைகள் தின்றதையும் காண முடிந்தது.

2 comments:

  1. இவர்களுக்கு எதிரான பிரேரனை மேலும் நிச்சயமாகி விட்டது. அன்புக்கு அனுகுண்டும் அசையும்,இப்படியான பலாத்காரங்களுக்கு எதுவும் அசையாது,மேலும் வலுப்பெரும்.

    ReplyDelete
  2. அன்புக்கு அனுகுண்டும் அசையும்������

    ReplyDelete

Powered by Blogger.