Header Ads



அட்டாளைச்சேனை அந்நூர் மகா வித்தியாலய ஆசிரியர்களையும், மாணவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு

(ஏ.எல்.ஜனூவர்)

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களையும் நெறிப்படுத்திய ஆசிரியர்களையும் கௌரவிக்கும் ஆறம் சூடும் மகிழ்ச்சிப் பெருவிழா 25.02.2014 அட்டாளைச்சேனை அந்நூர் மகா வித்தியாலய வளாகத்தில் பாடசாலையின் அதிபர் ஏ. எம்.எம். இத்ரீஸ் தலைமையில் இடம் பெற்றது.

இந்நிகழ்வுக்கு  கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பைபிரதம அதிதியாக  கலந்து கொண்டார்.

கடந்த ஆண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை பாராட்டி பதக்கம், சான்றிதழ் மற்றும் நினைவுச் சின்னங்கள் என்பன இந்நிகழ்வின் போது அதிதிகளினால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது பாடாசாலை சிறுவர்களினால் கலை கலாச்சார நிகழ்வுகளும் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

 இந் நிகழ்வில் கிழக்கு மாகாண உறுப்பினர் ஏ, எல். எம். நஸீர், அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஐ. அன்ஸில் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் அம்பாறை மாவட்ட பொதுப்பணிகள் அமைப்பின் தலைவர் எஸ். எல்.முனாஸ் உள்ளிட்ட பல கல்விமான்களும் , பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.



No comments

Powered by Blogger.