Header Ads



'நீர் வெறுப்பு நோய்'க்கான தடுப்பூசி மருந்து போடுமாறு ஆலோசனை

(JM.Hafeez)

2020 ஆம் ஆண்டளவில் இலங்கையில் நீர் வெறுப்பு நோயை முற்றாக இல்லாதொழிப்பதற்கு நீர் வெறுப்பு நோய்க்கான தடுப்பூசி மருந்தை ஏற்றுவதன் மூலம் தங்களையும் தங்களது செல்லப்பிராணிகளையும் பாதுகாத்துக்கொள்ளும் படி  கால்நடை உற்பத்தி சுகாதாரத்திணைக்களத்தின் விசர்நாய்க்கடிநோய் ஒழிப்பு வேலைத்திட்டம் கேட்டுள்ளது.

கால்நடை உற்பத்தி சுகாதாரத்திணைக்களத்தின் விசர்நாய்க்கடிநோய் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் முன்னோடி நடவடிக்கையாக உலக விலங்கு சுகாதார நிறுவனத்தினால் (ழுஐநு) அன்பளிப்பாக வழங்கப்பட்ட 300,000 விசர்நாய்க்கடிநோய் தடுப்பூசி மருந்துகள் நாடளாவிய ரீதியில்  இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

இத்தொகுதி தடுப்பூசி மருந்துகளை இவ்வாண்டு மார்ச் மாதத்திற்குள் வழங்கி முடிப்பதற்கு பேராதனையிலுள்ள கால்நடை உற்பத்தி சுகாதாரத்திணைக்களம் தீர்மானித்துள்ளது. பிரதேச கால்நடை வைத்தியர்களும் கால்நடை புலனாய்வு உத்தியோகத்தர்களும்  ஒன்றிணைந்து இத்தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் பரீட்சார்த்த நடவடிக்கையாக 95 கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கிய  யட்டிநுவர பிரதேச செயலாளர் பிரிவில் இத்தடுப்பூசி வழங்கும் திட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுவருவதாகவும் பேராதனை கால் நடை உற்பத்தி சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. 

2020 ஆம் ஆண்டளவில் இலங்கையில் விசர்நாய்க்கடி நோயை முற்றாக இல்லாதொழிப்பதற்கு அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளதாகவும், விசர்நாய்க்கடி நோயை இல்லாதொழிக்கும் இணைந்த வேலைத்திட்டத்திற்கு நாய் வளர்ப்போரின் ஒத்துழைப்பும் மற்றும் பொது மக்களின் ஆதரவும் மிகவும் அவசியமானதாகும். எனவே நாய் வளர்ப்போர் தங்களின் செல்லப் பிராணிகளுக்கு விசர்நாய்க்கடி நோய்க்கான தடுப்பூசி மருந்தை ஏற்றுவதன் மூலம் தங்களையும் தங்களது செல்லப்பிராணிகளையும் உயிர் கொல்லி நோயான விசர்நாய்க்;கடி நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம் என்றும் கால்நடை உற்பத்தி சுகாதாரத்திணைக்களத்தின் விசர்நாய்க்கடிநோய் ஒழிப்பு வேலைத்திட்ட அதிகாரிகள்  தெரிவித்தனர்

No comments

Powered by Blogger.