Header Ads



'உளப்பூர்வமான செயற்பாடுகளே ஜனாதிபதி விசாரணைக் குழுவை உருவாக்கும்'

(ஏ.சி.ஏ.மிஸ்காத்)

பலதரப்பினர் காலத்தின் தேவைக்கேற்பஅறிக்கைகளைவிடுவதுஅவரவர் சந்தர்ப்பத்திற்குபொருத்தமானதாகஅமையலாம். ஏதோஒருவகையில் வடமாகாண முஸ்லிம்கள் தொடர்பில் விடப்படும் அறிக்கைகள் வரவேற்கப்பட்டாலும் கூட, இவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட ஜனாதிபதிவிசாரணைக் குழு நியமனம் கோருகின்றவிடயத்தில் உருப்படியானநடவடிக்கைகள் மட்டுமே ஜனாதிபதிவிசாரணைக் குழுவைஉருவாக்கப் போதுமானதாகும் அந்தவகையில் ஒன்றுபட்டகருத்தின் அடிப்படயில் கோரிக்கைவிட்டு ஜனாதிபதியுடன் கதைத்துப் பேசிஅழுத்தம் கொடுப்பதன் மூலமே இக் கோரிக்கை சாத்தியப்பாடுடையதாக மாற்றமடையும் என பலவந்தமாகவெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லிம்களுக்கான பிரஜைகள் குழுவின் இணைத்தலைவர் யாழவன் நஸீர் செய்திவெளியிட்டுள்ளார். 

பிரஜைகள் குழுவின் கடந்தகால ஜனாதிபதிவிசாரணைக் குழு தொடர்பானகோரிக்கைநடவடிக்கைகளை அரசியலுக்கு அப்பால்நின்று சிவில் சமூகபோராட்டத்தின் மூலம் 1994ல் இருந்து முன்னெடுத்துவருகிறோம். எமதுகோரிக்கைகள் சிவில் சமூகபோராட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.வடமாகாண முஸ்லிம்களின்பிரச்சினைகள் யுத்த சூழலுக்குள் மட்டும் உள்ளடக்கப்படும் விடையம் ஆகாது.

1990ம் ஆண்டுபுலிகளால் அசையும்,அசையாசொத்துக்கள் பறிக்கப்பட்டு இனச் சுத்திகறிப்புசெய்யப்பட்டு,மனிதஉரிமைகள் அணைத்தும் குழி தோண்டிப் புதைக்கப்பட்ட நிகழ்விலிருந்து இன்றையநாட்களை கடந்து எதிர்கால நிகழ்வுகளில் அனுபவித்த,அனுபவிக்கப்போகும் நலப் பாதிப்புக்களை தடுத்துநிறுத்தக் கூடிய,உரிமைகளைப் பெறுவதற்கானதீர்வாகவே ஜனாதிபதி விசாரணைக்குழுவை நாம் எதிர்பார்க்கின்றோம்.
ஜனாதிபதிவிசாரனைக் குழுவின் அர்த்தப்பாடுகளை சகலதரப்பினர்களும் புரிந்துகொள்ளவேண்டியது அவசியமாகும். ஜனாதிபதிவிசாரணைக் குழு உள்ளடக்கங்களாகபின்வரும் விடயங்கள் உள்ளிருப்பது எமது அமைப்பின் எதிர்பார்ப்பாகும் .

01. வெளியேற்றத்தின் போதுசமூகப் பாதுகாப்புஅற்ற சூழலும் பறிக்கப்பட்டமனிதஉரிமைகளின் வகைகள் (வடக்கில் புலிகளால் கடத்தப்பட்டுசித்திரவதைசெய்யப்பட்டு கொடூரமாககொலை செய்யப்பட்ட முஸ்லிம்கள்)
02. திட்மிடப்பட்டு தாயகப்பிரதேச வதிவிடங்கள் அழிக்கப்பட்டமை
03. புலிகளின் இனச் சுத்திகரிப்புக்காரணமாக அதிர்வடைந்துஉயிர் இழந்தவர்கள்,மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள்,தொடர்ந்துவரும் இதன் தாக்கங்கள்
04. புலிகளால் பறித்தெடுக்கப்பட்டசொத்துக்களும்,இதன் தொடரில் உருவான தாயகமீள் குடியேற்ற வறுமைத் தன்மைகளும்.
05. மீள் குடியேறமுடியாது தொடர்ந்துவரும் நிருவாகத் தன்மைகள் 
06. பின்னடைவான சுழற்சிமுறைசெயல்பாடுடைய பொருளாதார,சமூக,கலாசார விழுமியங்கள் சார்ந்தவை.
07. இன்னும் பல
இவ்விடயத்தில் முஸ்லிம் அரசியல் தலைமைகள், முஸ்லிம் சமய,சமூக நிறுவனங்கள் மேலதிகவிபரங்கள் தேவைப்படின் புத்தளத்தில் இயங்கிவரும் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லிம்களுக்கான பிரஜைகள் குழுவுடன் தொடர்பு கொள்ளுமாறுகேட்டுக்கொள்ளப்படுவதுடன்,வரவேற்கப்படும் தங்களின் அறிக்கையுடன் ஆக்கபூர்வமான நடவடிக்கைக்குச் சென்று ஜனாதிபதிவிசாரணைக் குழு நியமிப்பதற்கானஅலுத்தத்தை பிரயோகிக்குமாறுபிpரஜைகள் குழுவின் இணைத் தலைவர் யாழவன் நஸீர் பகிரங்கசெய்தியொன்றை வெளியிட்டுள்ளார். 

தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
ccfem1994@gmail.com

No comments

Powered by Blogger.