Header Ads



ஆசிரிய ஆலோசகர்கள் பதவியுயர்வுகோரி கல்வியமைச்சின் முன் ஆர்பாட்டம்

(அனாசமி)

நாட்டிலுள்ள வலயக் கல்வி அலுவலங்களில் சேவையாற்றுகின்ற ஆசிரிய ஆலோசகர்கள் தங்களது பணியின் உயர்வுநிலை குறித்து பத்தரமுல்லையிலுள்ள கல்வியமைச்சின் முன் கடந்த புதன் கிழமை மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியினை நடாத்தினர். பாடசாலைகளில் சிறந்த கற்றலை மேற்பார்வை செய்யவும், சிறந்தமுறையில் ஆசிரியர்களது வாண்மைவிருத்தியை மேம்படுத்தவும், ஆலோசனை வழங்கவும் என 1962ஆண்டிலிருந்து ஆசிரிய ஆலோசகர்கள் எனும் பதவி உருவாக்கப்பட்டது. ஆயினும் இன்றுவரையிலும் அதற்கான சேவை ஒன்று உருவாக்கப்படவில்லை. பதவியுயர்வுகள் எதுவுமற்ற இச்சேவையினால் ஆசிரிய ஆலோசகர்கள் மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளனர். ஆசிரிய சேவையினுள் இதுவரை இருந்துவரும் இவர்களது கோரிக்கைகளை ஆசிரிய ஆலோசகர்களுக்கான சங்கங்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டன. இருந்த போதிலும் உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவில்லை.

அதேவேளை நீதிமன்றம், அரச பொதுச்சேவைகள் ஆணைக்குழு ஆகியன வழங்கிய தீர்ப்புக்கள் இவர்களுக்கான பதவியுயர்வுக்குரிய நடவடிக்கைகளை இதுவரையிலும் கல்வியமைச்சு மேற்கொள்ளப்படாத நிலையில் தங்களுக்கான உரிமைகளையும், பதவியுயர்வுகளையும், வழங்கப்பட்டுள்ள நீதிமன்றக் கட்டளைகளை அமுல்படுத்துமாறும் வேண்டியே நாட்டிலுள்ள 4000க்கும் மேற்பட்ட ஆசிரிய ஆலோசகர் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின்பின்னர் ஆசிரிய ஆலோசகர்கள் தங்களது கோரிக்கை அடங்கிய மகஜரை கல்வியமைச்சின் உயர் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தங்களை அர்ப்பணித்து மாணவர்களினதும், ஆசிரியர்களினதும் சிறந்த வழிகாட்டிகளாக வலம் வருகின்ற ஆசிரிய ஆலோசகர்களினது பணியை மதித்து அரசு இவர்களுக்குரிய பதவியுயர்வுகளை வழங்குவதற்கு துரிதகெதியில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், கிழக்கு மாகாண ஆசிரிய ஆலோசர்களுக்கான ஒன்றியம் வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளது. 

No comments

Powered by Blogger.