Header Ads



'நான் பார்க்கும் உலகம்' பேஸ்புக் முடக்கப்பட்டது

நான் பார்க்கும் உலகம் என்கின்ற முக நூல் செய்திச்சேவை கடந்த பல வருடங்களாக மிகச்சிறப்பாக தமிழ் பேசும் மக்களின் உணர்வுகளையும் உரிமைகளையும் தாங்கிவரும் முகநூல் செய்திச் சேவையாக செயற்பட்டு வந்ததை தமிழ் பேசும் உலகின் வாசகர்கள் அறிவர். 

நான்பார்க்கும் உலகம் என்கின்ற முக நூல் செய்திச்சேவை இது வெருமனே செய்திகளை தாங்கிவரும் ஊடகமாக மாத்திரமல்லாது மக்களின் உரிமைக் குரலாகவும் செயற்பட்டு வந்தது. 83000 வாசகர்களை எம்மத்தியில் உள்வாங்கி மிகப்பெரிய வாசகர் வட்டத்தினைக் கொண்ட தழிழ் ஊடகமாக செயற்பட்டு வந்தோம். 

அரசியல்வாதிகளின் முகத்திரைகளை அச்சமின்றி வெளிச்சத்துக்கு கொண்டுவந்த ஊடகம். 

ஒரு சில விசமிகளின் செயற்பாட்டினால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இது தடை செய்யப்பட்டது. (17ம் திகதி பெப்ரவரி மாதம் 2014 தொடக்கம்) 

எமக்கு எவ்வகையான அரசியல் தடைகள் வந்தாலும் அவற்றுக்கு அஞ்சாது தமிழ் பேசும் வாசகர்களுக்காக எமது சேவைகளை தொடருவோம். 

நான்பார்க்கும் உலகம் தமிழ் பேசும் உலகின் உரிமைக்குரலை யாராலும் அடக்க முடியாது. நாம் எமது வாசகர்கள் மத்தியில் இன்று தொடக்கம் மீண்டும் அதே பெயரில் புதுப் பொழிவுடன் செய்திகளை தாங்கி வருவோம். 

அரசியல், விநோதம், விளையாட்டு, சமையல், கல்வி, பெண்கள் விடயங்கள், என்று அனைத்தையும் தாங்கி உங்கள் முகநூலிள் உங்களை சந்திக்க வருகிறோம். 

இவ் அனைத்து ஏற்பாடுகளுக்கும் எமது தமிழ் பேசும் வாசகர்களின் தூண்டுதல்களே காரணம். எமது வாசகர்கள் எம்மோடு இருக்கும் வரைக்கும் நாம் யாருக்கும் அஞ்சாமலஇறைவனுக்கு மாத்திரமே அஞ்சி எமது சேவையை தொடருவோம்.

நான் பார்க்கும் உலகம்

www.facebook.com/NanParkumUlagam

No comments

Powered by Blogger.