Header Ads



கொழும்பு நகரத்திலுள்ள அரைவாசிக்கு மேற்பட்ட பாடசாலைகளில் டெங்கு நுளம்புகள் பெருகக் கூடிய சூழல்

(எம்.எம்.ஏ.ஸமட்)

கொழும்பு நகரத்திலுள்ள அரைவாசிக்கு மேற்பட்ட  பாடசாலைகளில் டெங்கு நுளம்புகள் பெருகக் கூடிய சூழல் காணப்படுவதாக சுகாதார அமைச்சின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இவற்றையடுத்து கொழும்பு மாநகர சபையின் சுகாதார திணைக்களம் இத்தகைய பாடசாலை நிருவாகத்திற்ககெரிராக கடுமையான நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளது.

இது தொடர்பில் சுகாதார திணைக்களத்தின் பிரதம சுகாதார அதிகாரி டாக்டர்  பிரதிப் காரியவசம் குறிப்பிடுவதாவது.

கொழும்பு நகரிலுள்ள அரச, தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகளைச் சேர்ந்த 475 மாணவர்கள் டெங்கு நுளம்பின் தாகத்திற்குள்ளாயிள்ளதாக பதியப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து நகரிலுள்ள 11 பாடசாலைகளின் அதிபர்களுக்கு எதிராகச்  சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளபோதிலும் அது தொடர்பில் பாடசாலை முகாமைத்துவம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை.

கடந்த ஜனவரி மற்றும் இம்மாத்தின் நடுப்பகுதி வரையான காலப்பகுதிக்குள்; 3,817 பேர் டெங்குவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகூடிய 1,420 பேர் கொழும்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் 475 பேர் கொழு;பு நகரில் டெங்கு நோய்க்கு ஆளாகியுள்ளனர். கொழும்பின் ஏனைய பிரதேசங்களிலிருந்து 945 நோயளார்கள் டெங்குவினால் பாதிக்கப்பட்டுள்ளாக பதியப்பட்டுள்ளது.

கடந்த வருடம் அதிகளவிலான டெங்கு நோயாளாக்ள கொழும்பு மாவட்டத்தில் அடையாளாம் காணப்பட்டனர். ஏறக்குறைய 10 ஆயிரம் பேர் டெங்குக் காய்ச்சலுக்கு இழக்காகியுள்ளதாக அவர் குறிப்பிடுகிறார்.

டெங்கு காய்ச்சலுக்கு ஆளாகி உயிர் இழந்தவர்களில் அதிகமானோர் பாடசாலைப் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள். இருப்பினும் அதிபர்களோ பாடசாலை முகாமைத்துவமோ இது குறித்து அக்கறை செலுத்தாது உள்ளன. 
கல்விக்கும் நிதிக்கும் மட்டும் கரிசனை செலுத்தாது சிறார்களின் சுகாதாரத்திலும் பாதுகாப்பிலும் அக்கறைகாட்ட வேண்டுமென அவர்; தெரிவிக்கிறார்.

பாடசாலைச் சூழில் காணப்படும் நுளம்புகள் விருத்தியடைக் கூடிய இடங்கள் அடையளாம் கண்டு அவை சுத்தம் செய்யப்படுவதுடன் பாடசாலையின் சுற்றுச் சூழலிலுள்ள பிரதேசங்களையும் அயலவர்களின் உதவியுடன் தொடர்ச்சியாக சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதன் மூலம் மாணவர்கள் டெங்குவினால் பாதிக்கப்படுவதைத் தடுக்க முடியுமென டாக்டர் காரியவசம் மேலும் குறிப்பிடுகிறார்.

No comments

Powered by Blogger.