மொஹமட் சியாம் படுகொலை வழக்கு - ஐவருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல்
முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன மற்றும் அவரது மகன் ரவிந்து குணவர்தன உள்ளிட்ட செய்யப்பட்டுள்ளது.
பம்பலப்பிட்டியைச் சேர்ந்த வர்த்தகர் மொஹமட் சியாம் என்பவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் இந்த குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்ட மா அதிபரினால், நீதிமன்றில் இவ்வாறு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் 21ம் திகதி மொஹமட் சிஹாம் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
கடத்தி கொலை செய்தல், கொலைக்கு உதவி வழங்குதல், சூழ்ச்சி செய்தல், சாட்சியங்களை மூடிமறைத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மொஹமட் பவுஸ்டீன் மற்றும் கிருசாந்த கோரலகே ஆகியோர் உண்மையை ஒப்புக்கொண்ட காரணத்தினால் அவர்களை அரசாங்க சாட்சியாளர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த சட்ட மா அதிபர் தீர்மானித்துள்ளார்.

Post a Comment