அதிகமாக ஆசைப்பட்டவருக்கு ஏற்பட்ட விபரீதம்..!
உடலை அழகுபடுத்த 200 முறை சத்திரசிகிச்சை செய்துகொண்டவர் நிரந்தரமாக செயலிழந்துள்ளார். அமெரிக்க நாட்டவர் ஒருவர் தனது ஆழகை மேம்படுத்த 200 சிகிச்சைகளை செய்து உலகில் அதிக முறை சத்திரசிகிச்சை செய்தவர்களில் ஒருவராக பதிவாகியுள்ளார்.
பால் மாற்று சிகிச்சை செய்துகொண்ட 58 வயது மொனிக் அலன் என்பவர் கடந்த 35 ஆண்டுகளில் தனது உடலை பலமுறை சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தியதால் தற்போது நிரந்தரமாக முடக்கப்பட்ட நிலையில் இருக்கிறார். இந்த சத்திரசிகிச்சை பழக்கத்திற்கு உள்ளாகியிருக்கும் இவர் தனது 22 ஆவது வயதில் பால் மாற்று சிகிச்சை செய்துகொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது உடற் பாகங்கள் அனைத்தும் சத்திர சிகிச்சைக்கு உள்ளாகியுள்ளது.
‘நான் வெளியே திரிய அதிக விருப்பம் கொண்டவள். நான் அழகாக இருக்க விம்புகிறேன். நான் இரு முறை கண் விழி சிகிச்சை செய்துகொண்டேன்.
அதேபோன்று கண் புருவத்திலும் மாற்றம் செய்தேன். 20 தடவைகள் மூக்கை சீர் செய்தேன். உதடுகளை அழகுபடுத்த 20 தடவைகள் ஊசி போட்டுக்கொண்டேன். 12 தடவைகள் மார்பகங்களை அழகுபடுத்த சத்திரசிகிச்சை செய்துகொண்டேன். 8 தடவைகள் மார்பகம் மற்றும் பின்புறத்தை சீர் செய்துகொண்டேன். பின்னர் மீண்டும் நான்கு தடவைகள் மார்பகங்களை சீர்செய்தேன்’ என்று தனது அழகு சிகிச்சைகள் குறித்து பெருமையாக விளக்குகிறார் மொனிக்.
இந்த சத்திர சிகிச்சைகளுக்காக மொனிக் மொத்தம் 200,000 டொலர்களுக்கு மேல் செலவு செய்திருக்கிறார்.
தனது பெற்றோரின் அனுசரணையுடன் 22 வயதில் பால் மாற்று சத்திர சிகிச்சை செய்துகொன்டதன் பின்னரே இந்த அழகு சிகிச்சைகளை தொடர்ந்ததாக மொனிக் குறிப்பிட்டுள்ளார்.
இதில் மொனிக் தனது உடல் பாகங்களில் மொத்தம் 12 லீட்டர் அளவு சிலிக்கன் திரவத்தை செலுத்தியுள்ளார். எனினும் இதனால் அவர் மோசமான பாதிப்பை சந்தித்து வருகிறார். தறபோது முடங்கிப் போயிருக்கும் மொனிக் நடன தொழிலையும் தொடர முடியாமல் உள்ளார். மொனிக் தனது இடுப்பு மற்றும் பின்புறத்திற்கு செலுத்திய சிலிக்கன் திரவம் தனது கால் பகுதிவரை கசிந்திருப்பதால் நடக்க முடியாமல் தவிக்கிறார்.
எனினும் தான் தொடர்ந்தும் சத்திரசிகிச்சை செய்துகொண்டு தனது முகம் மற்றும் உடலை மேலும் அழகுபடுத்தப் போவதாக மொனிக் குறிப்பிடுகிறார்.

Post a Comment