Header Ads



''பிரிட்டனும், பிரான்சும், எனது மகள்களை போன்றவை'' - ஒபாமா

பிரிட்டனும், பிரான்சும், எனது மகள்களை போன்றவை,'' என, அமெரிக்க அதிபர், ஒபாமா வருணித்துள்ளார். பிரான்ஸ் அதிபர், பிரான்காய்ஸ் ஹோலன்டே, மூன்று நாள் பயணமாக, அமெரிக்கா வந்துள்ளார். வாஷிங்டனில், அதிபர் ஒபாமாவை சந்தித்தபின், இருவரும் இணைந்து நிருபர்களை சந்தித்தனர்.

அப்போது, பிரான்ஸ் நாட்டு பத்திரிகையாளர் ஒருவர், பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நட்புறவு குறித்து கேட்டதற்கு, ஒபாமா கூறியதாவது: எனக்கு, மாலியா, சாஷா என்று இரு மகள்கள் உள்ளனர். அவர்களில், ஒருவரை விட்டு மற்றொருவரை மட்டும் தேர்ந்தெடுக்க முடியாது. அதுபோன்று, பிரிட்டனும், பிரான்சும் எனது இரு மகள்களைப் போன்றவை; இரண்டு நாடுகளும் தனிச்சிறப்புகள் பெற்றுள்ளன. இரண்டு நாடுகளில் ஒன்றை மட்டும் தேர்ந்தெடுக்க முடியாது. இவ்வாறு, அதிபர் ஒபாமா கூறியுள்ளார். 

No comments

Powered by Blogger.