முஸ்லிம்களை பழிவாங்கவே மாடறுப்புக்கு எதிரான போராட்டம் - பிரபா கணேசன்
மாடறுப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்ப்புத் தெரிவித்து பாதயாத்திரை செல்லும் பிக்குமார், மன்னாரில் கிடைத்திருக்கும் மனித எலும்புக்கூடுகள் சம்பந்தமாக ஏன் அக்கறை கொள்ளவில்லை என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பௌத்த மதம் என்பது இந்து மதத்தில் இருக்கும் மூட நம்பிக்கைகளை அகற்றி இந்து மதத்தில் இருக்கும் புனிதமான விடயங்களை மட்டும் எடுத்துச் சென்று புத்த பகவானால் உருவாக்கப்பட்ட மதமாகும்.
இந்த புனிதமான பௌத்த மதத்தை போதிக்கும் இலங்கையிலுள்ள அநேகமான பிக்குகள் இன்று பாதையில் ஆர்ப்பாட்டம் செய்வதிலும் அடிதடிகளில் ஈடுபடுவதும் அரசியல் செய்வதிலுமே அக்கறை செலுத்துகின்றனர்.
இந்த மாட்டறுப்பு விவகாரத்திலும் கூட இவர்கள் பௌத்த மதத்திற்காக இதை செய்யவில்லை. மாறாக முஸ்லிம் மதத்தினரை பழிவாங்கும் முகமாகவே இவ்வாறான செயல்பாடுகளில் ஈடுபடுகிறார்கள்.
இவர்களுக்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது மக்களுக்கு தெரிய வேண்டும். இந்த நாட்டை முழு பௌத்த நாடாக மாற்றுவதற்கான திட்டம் இதுவே.
முஸ்லிம் மக்களின் கலாசாரத்திற்கும் மதத்திற்கும் எதிராக பெரும்பான்மை இனத்தவர்களினால் அல்லது பௌத்த பிக்குகளால் நடாத்தப்படும் நடவடிக்கைகளை தமிழ் அரசியல் தலைவர்கள் ஒரு போதும் அனுமதிக்க கூடாது. இன்று சிங்கள ராவய, ஹெல உறுமய, பொதுபல சேன போன்றவர்கள் பௌத்த மதம் இந்து மதத்துடன் ஒன்று பட்டது என கூறுகின்றார்கள்.
இதை நம்பி தமிழ் இந்துக்கள் முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடாத்தப்படும் தாக்குதலை கண்மூடி பார்த்துக் கொண்டிருப்பார்களேயாயின் நாளை எமக்கும் இதே கதிதான் ஏற்படப் போகின்றது.
ஆகவே இப்படியானவர்களுக்கு பின்னணியில் அரசாங்கத்திலுள்ளவர்கள் இருக்கின்றார்கள் என்ற நிலை இருந்தாலும் கூட அரச தரப்பு, எதிர் தரப்பு என்று பாராமல் அனைத்து இந்து முஸ்லிம், கிறிஸ்தவ சிறுபான்மையின அரசியல் தலைவர்கள் அணிதிரள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இன்று மன்னாரிலும் திருகோணமலையிலும் கிடைத்திருக்கும் எலும்பு கூடுகளுக்கு இந்த ஆபத்தான அமைப்பினர் எப்படி பதில் கூற போகின்றார்கள் என பார்ப்போம் என பிரபா கணேசன் எம்.பி தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
.jpg)
இந்த அளவு வீரியமாக பேசுவதற்கு நம்ம முஸ்லிம் மந்திரி அல்லது அமைச்சர் ஒருவர் இருப்பாரா? இலங்கை முஸ்லிம்களை பார்மா முஸ்லிம்களைப் போல நாடாத்த துடிக்கும் பௌத்த தீவிரவாதிகளிடம் இருந்து சிறு பான்மை சமூகங்களைக் காப்பற்ற உங்களைப் போன்ற நல்ல தமிழ்த் தலைவர்களாவது குரல் கொடுக்க வேண்டும் ஐயா!.........
ReplyDeleteநன்றி MR.பிரபா கணேசன் அவர்களுக்கு.... எமது தலைவர்கள் வாய்மூடி மௌனிகளாக இருக்கும் போது.......!!!
ReplyDeleteநாங்கள் தானே ஸ்ரீலங்கா அரசுக்கு ஆதரவாய் கொழும்பில் கொடிபிடித்தது. கொடிபிடித்தால் எப்படி வீரியம் வரும்?
ReplyDelete