மாணவர்களைக் கண்டிப்பதில் இருந்து விலகியிருக்க தீர்மானம்
எதிர்காலத்தில் மாணவர்களைக் கண்டிப்பதில் இருந்து விலகியிருக்கப் போவதாக குருநாகல் மாவட்ட ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கம் தெரிவித்துள்ளது.
குருநாகலில் 25-02-2014 முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டபோதே அந்த சங்கத்தினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.
மாணவியொருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பில் குருநாகல் சர் ஜோன் கொத்தலாவல வித்தியாலயத்தின் அதிபருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளைக் கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
குருநாகல் நகரத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் குருநாகல் மாவட்ட அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட இவர்கள், குருநாகல் பௌத்தாலோக பிரிவேனாவிற்கு அருகில் இருந்து ஊர்வலமாக மணிக்கூட்டு கோபுரத்தைச் சென்றடைந்தனர்.
இலங்கை சுதந்திர அதிபர்கள் சங்கத்தின் செயலாளர், ஈ.எம்.குணபால இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கருத்துத் தெரிவித்தார்.
மனித உரிமைகள் எனக் கூறி இடமளித்தால் மாணவர்கள் தங்களுக்குத் தேவையானவற்றை செய்யக் கூடிய நிலையே உருவாகும். இதனால் நாட்டின் எதிர்கால சந்ததியினர் அழிந்து விடுவார்கள். அதேபோன்று, தற்போது பாடசாலைகளில் ஆசிரியர்கள் மற்றும் தலைவர்கள் ஒழுக்காற்றுக் குழுவில் இருந்து வெளியேறியுள்ளனர். அதிபருக்கு தனிமையில் பாடசாலையைக் கொண்டு செல்ல முடியாத நிலையே ஏற்பட்டுள்ளது. ஒழுக்கம் தொடர்பாக செயற்பட்ட ஒருவர் பாடசாலையில் இல்லாத நிலையே தற்போது காணப்படுகின்றது. என்றார் அவர்.

aasiriyarkal taan ariwu geevikal anru ninaittadu awwala wu tappu manawarkalai k[t]andikka weendaam anradu yaru manawarkalai k[t]andikkum murayai aasiriyarkal mudalil katrukkolla weendum edukuda teriyamal aatpaattam nadatta wekkama illa
ReplyDelete