நீதிமன்ற தடையையும் மீறி மிருக வதைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகும் சிஹல ராவய
மிருக வதைக்கு எதிராக சிஹல ராவய அமைப்பு போராட்டம் நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் எந்தப் பாகத்திலும் போராட்டங்களை நடத்தக் கூடாது என நீதிமன்றம் சிஹல ராவய அமைப்பிற்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த உத்தரவினையும் மீறி எதிர்வரும் வாரத்தில் போராட்டம் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.எதிர்வரும் 9ம் திகதி முதல் 16ம் திகதி வரையில் சிஹல ராவய அமைப்பு மிருக வதைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடவுள்ளது.
கண்டி ஸ்ரீ தலாத மாளிகையிலிருந்து கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை வரையில் இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது.நாட்டில் மிருக வதையை தடை செய்யுமாறு அரசாங்கத்திடம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

mirukam anum poodu aadu;madu;panry;kooli;meen,utpada sahala uyir geevikalum mirukam taane anpadu mirukangalukku vilanginaal OK
ReplyDelete