Header Ads



தற்போது ஆட்சியில் உள்ளவர் அதிகாரத்தை தமது குடும்பத்துக்குள் வைத்துக்கொள்ள முயற்சிக்கிறார் - சந்திரிகா

தமது ஆட்சி காலத்தின் போது இராணுவ முனைப்புக்களை காட்டிலும் சமாதான வழிமுறைகளின் மூலமே விடுதலைப்புலிகளை அனுக முயற்சித்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

போர் காலத்தின் போது சமாதானமும் அதேநேரம் அபிவிருத்தி போர் பாதிக்கப்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்படுவதை தாம் உறுதி செய்துக்கொண்டதாக சந்திரிகா குறிப்பிட்டுள்ளார்.

எப்போது விடுதலைப்புலிகளுடன் சமாதான பேச்சுவார்த்தைக்கு தாம் தயாராகவே இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

தமது உயிரை பறிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட போதும், தாம் காயமடைந்த போராளிகளுக்கு சிகிச்சை மேற்கொள்ள மருத்துவமனைகளை திறந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது ஆட்சியில் உள்ளவர் அதிகாரத்தை தமது குடும்பத்துக்குள் வைத்துக்கொள்ள முயற்சிக்கிறார் என்றும் சந்திரிகா தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.