சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குட்பட்ட மாணவ, மாணவிகளின் எதிர்கால நலனைக் கருத்திற் கொண்டு..!
(ஹாசிப் யாஸீன்)
சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குட்பட்ட மாணவ, மாணவிகளின் எதிர்கால நலனைக் கருத்திற் கொண்டு கல்வியை விட்டு இடைவிலகி மீண்டும் பாடசாலைக்கு மீளிணைப்பு செய்யப்பட்ட மற்றும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மாணவ, மாணவிகளுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (25) இடம்பெற்றது.
சாய்ந்தமருது பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உளசமூக உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.சாஜித் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், மாவட்ட உளசமூக உத்தியோகத்தர் யூ.எல்.அஸார்தீன், நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம்.உதுமாலெப்பை, சமுர்த்தி தலைமைக்காரியாலய உத்தியோகத்தர் ஏ.சீ.ஏ.நஜீம், சாய்ந்தமருது முபாறக் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சாமஸ்ரீ தேசமாணிய எம்.எஸ் .எம்.முபாறக் மற்றும் கிராம சேவகர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது மாணவர்களுக்கு அதிதிகளினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் கல்வியின் முக்கியத்துவம் பற்றி சாய்ந்தமருது முபாறக் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சாமஸ்ரீ தேசமாணிய எம்.எஸ்.எம்.முபாறக் மாணவர்களுக்கு அறிவுரை நிகழ்த்தினார்.



Post a Comment