தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு அருகில் இந்திய பிரஜை கைது
(யு.எம்.இஸ்ஹாக்)
அம்பாறை ஒலுவில் பிரதேசத்தில் வைத்து இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு அருகில் வைத்து குறித்த நபர் நேற்று (25) மாலை சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கபட்டுள்ளார்.
குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறி சுற்றுலா விசாவில் இலங்கை வந்த இவர் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிசார் தெரிவித்துள்ளனர் கைது செய்யப் பட்டவர் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராவார்.
சந்தேகநபர் இன்று (26) சம்மாந்துறை நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக சம்மாந்துறை பொலிசார் தெரிவித்தனர்
.jpg)
Post a Comment