Header Ads



குற்றமிழைக்கவில்லை - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ


அரசாங்கம் என்ற வகையில் தாம் எந்தவொரு தருணத்திலும் குற்றமிழைக்கவில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எந்தவொரு சவால்கள் முன்வைக்கப்பட்ட போதும், அபிவிருத்தி பணிகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஹம்பாந்தோட்டை மாவட்ட தேர்தல் காரியாலயம் இன்று அம்பலத்தொட்டை பகுதியில் திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கடந்த யுத்த காலத்தில் பயங்கரவாதிகளால் பொதுமக்களுக்கு இளைக்கப்பட்ட இன்னல்களை சர்வதேச மறந்துவிட்டதாக குறிப்பிட்டார்.

இலங்கையில் விசாரணைகளை மேற்கொள்ள யாரும், இல்லாத காரணத்தால் சர்வதேச விசாரணையொன்றை மேற்கொள்ள வேண்டும் என்று கோருகிறார்கள்.

ஆனால், நாட்டில் புத்திஜீவிகள், நிபுணர்கள், சுயாதீனக் கொள்கையை கொண்டவர்கள் பலர் இருக்கின்றார்கள் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.