Header Ads



வானிலிருந்து விண்கல் விழுந்து, சமயலறைப்பகுதி தீ பற்றி எரிந்தது

(tM) நுவரெலியா, ராகலை தோட்டத்தில் லயகுடியிருப்பு ஒன்றில் வீட்டின் சமயலறைப்பகுதியில் நேற்றிரவு  விண்கல் ஒன்று விழுந்துள்ளது. 

வீட்டு உரிமையாளரான டீ.எம். கருணாரத்ன சமயலறைப்பகுதியில் சத்தம் கேட்டதையடுத்து அங்கு சென்று பார்த்தபோது சமயலறைப்பகுதி தீ பற்றி எரிந்துள்ளது. 

வீட்டு உரிமையாளர் இது தொடர்பில் உடனடியாக ராகலை பொலிஸ் நிலையத்தில் தெரிவித்ததையடுத்து பொலிஸார் உடனடியாக குறித்த வீட்டிற்கு பாதுகாப்பு வழங்கியுள்ளனர். இது விண்கல்லா? அல்லது வேறேனும் கல்லா? என்பது குறித்து ஆராய்வதற்கு  மொறட்டுவை பல்கலைகழகத்தின்; விஞ்ஞான ஆய்வாளர்களுக்கு அறிவித்துள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பி.ஜி.குமாரசிரி தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.