Header Ads



அக்கரைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கழகங்களுக்கிடையிலான விளையாட்டு போட்டி

 (ஏ.எல்.ஜனூவர்)

அக்கரைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கழகங்களுக்கிடையிலான விளையாட்டு போட்டி அக்கரைப்பற்று பிரதேச செயலக விளையாட்டு உத்;தியோகத்தர் எம்.எச்.எம். அஜ்வத் தலைமையில் நேற்று அக்கரைப்பற்று அதாஉல்லா விளையாட்டு மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

இதில் முதலாவது போட்டியாக அணிக்கு 6 பேர் 5 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஆரம்பமானது.

இப்போட்டியில் 6 கழகங்கள் பங்குபற்றி இறுதிப்போட்டிக்கு ஹல்லாஜ் விளையாட்டுக்கழகமும், கருங்கொடி வொரியஸ் விளையாட்டுக்கழகமும் தெரிவானது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி கொண்டு ஹல்லாஜ் விளையாட்டுக்கழகம் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது வழங்கப்பட்ட 5 ஓவர்களில் 57 ஓட்டங்களை எதிரணிக்கு சவாலாக வழங்கியிருந்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கருங்கொடி வொரியஸ் அணியினர் 5 ஓவர்களில் 48 ஓட்டங்களை மாத்திரமே பெற்று எதிரணியின் வெற்றி வாய்ப்புக்கு வழிவகுத்தனர். இப்போட்டியில் வெற்றி பெற்ற கழகத்திற்கு வெற்றிக்கோப்பையும், சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இப்போட்டிக்கு பிரதம அதிதிகளாக அக்கரைப்பற்று உதவி பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். றஸான், அக்கரைப்பற்று பிரதேச தவிசாளர் எம்.ஏ.எம். றாஸிக், மற்றும் சமாதான நீதவானும் தற்போதய றஹிமியா விளையாட்டுக்கழகத்தின் தலைவருமான ஏ.எம். முஹம்மட் சஹிட் ஜே.பி அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.




No comments

Powered by Blogger.