Header Ads



பாராளுமன்றத்திற்குள் ஐ.தே.க. ஆர்ப்பாட்டம் - சபை நடவடிக்கைகள் ஒத்திவைப்பு

நுரைச்சோலை அனல்மின் நிலையத் திட்டம் மற்றும் மின்சாரம் தொடர்பில் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் இன்று நாடாளுமன்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தின் நடுவே பதாகைகளை ஏந்தியவாறு ஐ.தே.க. வினர் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.

இதனையடுத்து ஏற்பட்ட குழப்பம் காரணமாக சபை நடவடிக்கைகள் எதிர்வரும் 18ம் திகதி வரை பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடியால் ஒத்திவைக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.