பசுவதையை தடுக்க ஜனாதிபதி செயலகத்திலிருந்து உறுதிபடுத்தல் கடிதம்..!
சிங்கள ராவய அமைப்பின் போராட்டம் காரணமாக கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையத்திற்கு முன்பாக போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
காலி வீதியை நோக்கிய ஒல்கோட் வீதியின் ஒரு மருங்கில் வாகனங்கள் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பசுவதைக்கு எதிர்ப்பு தெரிவித்து சில பௌத்த பிக்குகள் அந்த பகுதியில் மூன்றாவது நாளாக உணவுத் தவிர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பசுவதையை தடுக்கும் நோக்கில் பிரேரணை ஒன்றை கொண்டுவருவது தொடர்பான அரசாங்கம் எழுத்துமூலம் தமக்கு உறுதியளிக்க வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.
இதுதொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரியொருவர் இன்று மாலை உறுதிபடுத்தல் கடிதம் ஒன்றுடன் உணவுத்தவிர்ப்பு போராட்டம் இடம்பெறும் பகுதிக்கு சென்றுள்ளார்.
எனினும். அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று போராட்டத்தில் ஈடுபடும் பிக்குகள் தெரிவித்துள்ளனர். இந்த தருணத்தில் பௌத்த பிக்கு ஒருவர் பெற்றோல் அடங்கிய கொள்கலனை எடுக்க முயன்ற போது காவல்துறையினர் அதனை தடுத்துள்ளனர்.

Post a Comment