Header Ads



இனவாதத்தை பேசி, சிங்கள மக்களின் வாக்கைப் பெற்று அரசியல் லாபம் தேடும் பணி - முஜிபுர் ரஹ்மான்

குற்றம் செய்தால்தான் பயப்பட வேண்டும் குற்றம் இழைக்கா விட்டால் ஏன் பயப்பட வேண்டும்.  குற்றம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் ஓட்டையில் இருந்து தப்பிக்கொள்ள முடியாது. ஆனால் இறைவனின் சட்டப்பிடியிலிருந்து ஒருபோதும் தப்பித்துக்கொள்ள முடியாது என ஐ.தே.கட்சியின் மேல்மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கூறினார்.

கொலன்னாவ D.F.C விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்குக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு கூறும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், 

இம்மாகாண சபை தேர்தல் பெப்ரவரி மாதம் நடைபெற்று மார்ச் மாதம் சபை கூடியிருக்க வேண்டும். அவ்வாறு நடத்தாதன் காரணம்  ஜெனிவாவை தூக்கிப் பிடித்து அரசியல் லாபம் தேடும் நோக்கில்தான் அரசு இம்மாகாண சபை தேர்தலை மார்ச் 29ம் திகதிக்கு பிற்போட்டுள்ளது.

ஜெனிவாவில் அமெரிக்கா மார்ச் மாதம் 28ம் திகதி இலங்கைக்கு  எதிராக மனித உரிமை மீறல் தொடர்பான பிரேரணை கொண்டு வர தீர்மானித்துள்ளது.

இத்தீர்மானத்திற்கு முன்னர் 27ம் திகதி ஜனாதிபதி மேல்மாகாணத்தில் ஐ.தே.கட்சியின் வாக்கு வங்கியை குறைக்கும் நோக்கில் இனவாதத்தை பேசி பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்கைப் பெற்று அரசியல் லாபம் தேடும் பணியில் இறங்கியுள்ளார்கள் என்பதுதான் உண்மை.

பெரும்பான்மை சிங்கள மக்களை ஐ.தே.கட்சியிலிருந்து பிரித்தெடுக்கும் நோக்கில் கையாளும் தந்திரமாகவே பார்க்க வேண்டியுள்ளது. இதனால் பெரும்பான்மை சிங்கள மக்கள் அரசாங்கத்தின் வலைகளுக்குள் சிக்கி விட வேண்டாம் என்றார்.

No comments

Powered by Blogger.