Header Ads



நான் ஒருபோதும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படமாட்டேன் - கொழும்பு மேயர் முஸம்மில்

ஏ.ஜே.எம்.முஸம்மில்  மன்றத்தின் மகளிர் பிரிவால்  முன்னெடுக்கப்பட்ட குறைந்த வருமானம் பெறுவோருக்கான இலவச கண்சிகிச்சை  முகாம் 27-02-2014 நடைபெற்றது. இதன்போது மூக்குக் கண்ணாடிகளும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் மன்றத்தின் தற்போதைய தலைவி பெரோஸா முஸம்மிலும் கலந்துகொண்டிருந்தார். அவர் இதன்போது முஸம்மில் கருத்து வெளியிட்டார்;

அன்று செயற்குழு கூட்டத்தில் பேசிய மங்கள சமரவீர எம்மால் இந்தத் தேர்தலில் வெற்றிபெற முடியாது எனக் கூறினார். அப்படியாயின், தோல்வியடையும் தேர்தலிலேனும் இவரை நிறுத்தி இந்தத் தேர்தலில் வெற்றியீட்டுவதற்கு நாம் முயற்சிக்கவில்லையா? இவர்கள் கட்சி தொடர்பில் சிந்திக்கவில்லை. தம்மைப் பற்றி மாத்திரமே சிந்திக்கின்றனர். எம்மீது பல குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றனர். நான் ஐக்கிய தேசியக் கட்சியின் மேயர். நான் கொழும்பு மக்களுக்காக வேலை செய்துள்ளேன். ஒரு போதும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படமாட்டேன், நான் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்துகொண்டு கட்சிக்கு எதிராக செயற்படுகின்றவர்களை விரட்டியடிக்கும் வரை போராடுவேன்

No comments

Powered by Blogger.