கொழும்பில் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தது சிங்கள ராவய
மிருகவதைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிங்கள ராவய அமைப்பு கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையத்திற்கு முன்னால் உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்து.
சிங்கள ராவய அமைப்பினரால், கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் இருந்து கடந்த 9ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட பாதையாத்திரை கொழும்பை வந்தடைந்த நிலையில் இந்த உணவு தவிர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன்றைய 16-02-2014 தினம் தெமட்டகொடயில் இருந்து ஆரம்பமான பாதையாத்திரை கொழும்பு கோட்டை பிரதேசத்திற்கு உள்நுழைவதை தடுக்கும் வகையில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியின் கோரிக்கையின் பேரில் இந்த நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக சிங்கள ராவய அமைப்பின் அமைப்பாளர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், சிங்கள ராவய அமைப்பு கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையத்திற்கு முன்னால், மிருகவதைக்கு எதிர்ப்பு தெரிவித்து உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.

في البداية أنهم جميعا أن يموت سعيدة جدا لطمأنة الأمة من سري لانكا. الإنكا الله، والله هو الكافي كما يحدث كل قريبا
ReplyDelete