இலங்கையைச் சேர்ந்த தந்தையால் டுபாயில் கைவிடப்பட்ட 4 வயது சிறுமி
இலங்கையைச் சேர்ந்த தந்தையால் டுபாயில் கைவிடப்பட்ட 4 வயது சிறுமி ஒருவரை டுபாயின் மனித உரிமைகள் திணைக்களம் மற்றும் சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பிரிவு என்பன மீட்டுள்ளன.
நதி நெருக்கடியின் காரணமாக குறித்த தந்தை அந்த சிறுமியை கைவிட்டுச் சென்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் தங்கி இருந்த வீட்டுக்கு அருகில் இருந்த ஒருவரின் வீட்டில் குறித்த சிறுமையை தங்க வைத்துவிட்டு சென்ற தந்தை நீண்ட நாட்களாக வீடு திரும்பாத நிலையில் குறித்த சிறுமி காவற்துறை நிலையத்தில் கையளிக்கப்பட்டுள்ளார்.
தந்தை தொடர்பில் டுபாய் காவற்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
.jpg)
Post a Comment