Header Ads



கல்முனை அஷ்ரப் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவை உடனடியாகக் கலைக்குமாறு வேண்டுகோள்


(ஏ.பி.எம்.அஸ்ஹர்)

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரை இடமாற்றம் செய்வதோடு வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவையும் உடனடியாகக் கலைக்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கல்முனைப் பிரதேசத்தின்அபிவிருத்தி சம்பந்தமான முக்கிய கலந்துரையாடலொன்று அண்மையில் கமு-அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் நடைபெற்றபொழுது அதில் கலந்துகொண்ட பொதுமக்கள் மற்றும் புத்திஜிவிகளினால் கல்முனைப்பிரதேச அபிவிருத்திக்குழுவின் தலைவரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உருப்பினருமான
எச்.எம்.எம்.ஹரிஸிடம்மேற்படி வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.

கல்முனைப் பிரதேசத்தின் அபிவிருத்தியில் இங்குள்ள திணைக்கள தலைவர்கள் சகலரும் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருக்குபூரண ஒத்துழைப்பை வழங்கி வருகையில் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரும்  வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவும்  பாராளுமன்ற உருப்பினருடன் இணைந்து செயல்படாமல் அங்கு மேற்கொள்ளடவுள்ள அபிலிருதிக்குத் தடையாக உள்ளதால் அதன் அபிருத்தி நடவடிக்கையில் பின்னடைவு ஏற்பட்டுள்தை கருத்திற்கொண்டு தற்போதுள்ள வைத்திய அத்தியட்சகரை
உடனடியாக இடமாற்றம் செய்வதோடு வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழுவையும் உடனடியாகக் கலைத்து பதிய வைத்திய அத்தியட்சகரை  நியமிப்பதோடு புதிய அபிவிருத்திக் குழுவொன்றையும் நியமிக்க வேண்டும் என அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் புத்திஜிவிகளால் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரிடம்  வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

1 comment:

  1. வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு தடையாக இருக்கச்சொன்ன புத்திகாளிகள் இவர்கள் தானா, பல தடைகளுக்கு மத்தியிலும் வைத்தியசாலை அபிவிருத்தி அடைந்து கொண்டிருப்பது இவா்களுக்குத் தெரியாதா? வைத்திய அத்தியட்சகரை நீக்குமாறு சொல்வதும் இவா்கள்தானா.

    ReplyDelete

Powered by Blogger.