பொலிஸார் எங்களை மிகமோசமாக தாக்கினார்கள் - சிங்கள ராவய
மாடுகள் இறைச்சிக்காக அறுக்கப்படுவதை எதிர்த்து கொழும்பு கோட்டை ரெயில் நிலையத்திற்கு எதிரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிக்குமார் மீது சாதாரண உடையில் வந்திருந்தவர்களுடன் பொலிஸார் இணைந்து தாக்குதல் நடத்தியதாக சிங்கள ராவய அமைப்பு தெரிவித்துள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாடுகள் அறுக்கப்படுவதை நிறுத்துவதாக ஜனாதிபதியிடம் உறுதிமொழியை கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிங்கள ராவய அமைப்பின் உறுப்பினரான வேவல சீலரத்தன தேரர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொலிஸார் மிக மோசமாக பிக்குமாரை தாக்கினர். கண்டியில் இருந்து நாங்கள் பாத யாத்திரையாக கொழும்புக்கு வந்தோம். எந்த இடத்திலும் பிரச்சினைகளை ஏற்படுத்தவில்லை.
தேவையற்ற வகையில் பொலிஸாரும், சாதாரண உடையில் இருந்தவர்களும் தலையிட்டு பிரச்சினைகளை ஏற்படுத்தினர். எமது பிக்குமார் தாக்குதலுக்கு உள்ளாகினர் என்றார்.
மாடுகள் இறைச்சிக்காக அறுக்கப்படுவதை நிறுத்துவது தொடர்பில் திருப்தியான பதிலை ஜனாதிபதி வழங்கவில்லை என்பதால், தமது எதிர்ப்பு நடவடிக்கையை உண்ணாவிரதப் போராட்டமாக மாற்றியுள்ளதாக சிங்கள ராவய அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
.jpg)
உங்கள் விளக்கம் உங்கள் மக்களுக்கே பிடிக்குதில்லை,அப்போ எப்படி மற்றவர்களுக்கு பிடிக்கும்?
ReplyDeleteஅடிப்படை கல்வியறிவு இல்லாதவர்களே இவர்கள்.பாடசாலைக்கு போயிருந்தால் அங்கு விஞ்ஞான பாடத்தையாவது கற்றிருப்பர்,ஆனால் அதுவுமில்லை.இவ்வுலகில்,அனைத்துமே இயற்கையாக ஒரு கட்டுபாட்டில் இயங்கிக்கொண்டிருக்கிரது.அதில் நாம் மாற்றங்களை செய்ய நினைத்தால்,அதன் எதிர் விளைவுகள் பல கோணங்களில் எம்மை தாக்கும் அழிக்கும்.
உதாரணத்திற்கு,இவர்கள் சொல்லுவதைப்போலவே மாடுகளை அருக்காமல் விட்டால்,மாடுகளின் என்னிக்கை அதிகரித்து,அதற்கு உணவுகள் மற்றாக்குறைகள்,நோய்கள் என பல விடயங்கள் நிகழ தொடங்கும்.அப்போது,எல்லா மாடுகளும் ஊருக்குள்,வீதிகளுக்குள்,நகரங்களுக்குள் மேயே தொடங்கும்,பெரும் பிரச்சினைகளும் னோய்களும் மனிதர்களுக்கு வரத்தொடங்கும்.
இயற்கையின் சமனிலை பாதிக்கபடாமல் மனிதர்கள் நடக்கனும்.சிங்கப்பூரில் இப்படிதான்,காகங்களை துப்பாகியால் சுட்டு வீழ்த்தி முடித்ததன் பின்னெர்தான் அதன் எதிர் தீய விளைவுகள் முழு நாட்டையும் பாதிக்க தொடங்கியது.அதாவது நகரத்தை,குப்பைகூழங்களை சுத்தம் செய்ய காகம் இல்லாமல் போனதை குருகிய அறிவு உள்ள மனிதன் அப்போதுதான் விளங்கினான்.இதனால்,வெளினாடுகளில் இருந்து காகமுட்டைகளை தருவித்து அடைகாத்து காககுட்டிகளை கவணமாக வெளியாக்கிணர்.
இதுதான் இயற்கையின் புதிணம்,.இதை சிங்கள ராவய,பொதுபலசேனா இன்னும் பல சேனாக்கள் விளங்குவார்களா?
very good sharjahan
ReplyDelete