சவூதி அரேபிய ஹாதி ஹமாம் நிறுவனம் கப்பல் கட்டும், திருத்தப் பணிகளை இலங்கையில் ஆரம்பித்தது (படங்கள்)
44 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் உலகப் பிரசித்தி பெற்ற சவூதி அரேபியக் கம்பனியான ஹாதி ஹமாம் பல்தேசிய நிறுவனத்துக்கும் இலங்கை அரசுக்குமிடையே கடந்த வருடம் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் படி சீகல்ப் சிப்யார்ட்டின் கப்பல் கட்டும் மற்றும் திருத்தப் பணிகளுக்கான ஆரம்ப கட்ட வேலை அண்மையில் காலித் துறைமுகத்தில் வைபவரீதியாக அங்குரார்ப்பணம் செய்து கொள்ளப்பட்டது. இந்த வைபவத்தில் பிரதம அதிதியாக துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலை பிரதி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன மற்றும் ஹாதி ஹமாம் , கிழக்கு மாகாண விவசாய கால்நடை உற்பத்தி, கைத்தொழில் அபிவிருத்தி,மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், தென் மாகாண ஆளுநர் குமாரி பாலசூரிய, பாராளுமன்ற உறுப்பினர்கள், காலி நகர சபை தவிசாளர் , துறைமுக அதிகார சபையின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
1979 இல் ஆரம்பிக்கப்பட்ட ஹாதி ஹமாம் சவூதி நிறுவனம் சர்வதேச அளவில் வளர்ச்சி அடைந்து எண்ணெய் மற்றும் வாயு துறைகளில் உலகப் புகழ் பெற்று விளங்குகிறது. இந்நிறுவனத்தின் தலைமையகம் சவூதி அரேபியாவிலும் கிளை நிறுவனங்கள் பஹ்ரென் மற்றும் துபாய், சிங்கப்பூர் போன்ற பல நாடுகளிலும் உள்ளன.
இலங்கையில் அமைதி சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டு பொருளாதார வளர்ச்சிக்கும் வளத்துக்குமான அமோகமான வாய்ப்புக்கள் உள்ளமையின் காரணமாகவே இலங்கையில் முதலீடு செய்ய தீர்மானித்ததாக இந் நிறுவனத்தின் பணிப்பாளர் ஜனாப் முஹமட் ஹாதி தெரிவித்தார். ஏற்கனவே 700 கப்பல்களுக்கு மேல் சொந்தமாக கொண்டுள்ள இந்த நிறுவனம் கப்பல் கட்டுதலிலும் துறைமுக அபிவிருத்தியிலும் கப்பல் திருத்த பணிகளிலும் முக்கிய பங்களிப்பு வகிக்குமென அவர் குறிப்பிட்டார்.
மேற்குக்கும் கிழக்கிற்கும் இடையிலான கப்பல் பயணப்பாதையில் மிக அத்தியாவசிய தேவையான கப்பல் கட்டும் சேவையையும் திருத்த வேலையையும் வழங்கக் கூடிய ஒரு சிறப்பான மத்திய நிலையமாக காலி அமைந்திருப்பதன் காரணமாகவும் இந்த முழுப்பிராந்தியத்திலும் அவ்வாறான ஒரு நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்
சிறிய கப்பல்களும், சுற்றுலா கப்பல்களும் மற்றும் 5000 டொன் எடை கொண்ட கப்பல்களும் இங்கு கட்டப்படுமெனவும் எண்ணெய் மற்றும் வாயு ,வர்த்தக துறைகளிலும் இந்த கப்பல் சேவைகள் ஈடுபடுத்தப்படுமெனவும் குறிப்பிட்டார்.
இந்த நிறுவனத்தின் மூலமாக நேரடியாகவும் மறைமுகமாகவும் 5000ற்கு மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு வழங்க முடியுமெனவும் தெரிவித்தார்.


எல்லா வளமும் இலாபமும் முஸ்லிம் நாடுகளிடமிருந்தே,ஆனால் உண்டுவிட்டு தாக்குவதோ முஸ்லிம்களைத்தான்.இந்த 5,000 பேருக்கான வேலை வாய்ப்புக்கூட முஸ்லிம்களுக்கு 500 ஆவது கிடைக்கும் என்பதும் சந்தேகமே.
ReplyDeleteஇனவாதம் பேசும் இந்த அரசை கோபித்து ஒன்றும் பயனில்லை,இலங்கை முஸ்லிம்களின் அவல நிலையை பார்த்துக்கொண்டு கண்மூடித்தணமாக முஸ்லிம்களுக்கும் ஒரு பெரும் இலாபமில்லாமல் அரசுடன் விழும் முஸ்லிம் நாடுகளைத்தான் நாம் குறை சொல்ல வேண்டும்.உதவி வழங்கும் முஸ்லிம் நாடுகள் நினைத்தால் எவ்வளவோ நிபந்தனைகளை வழங்கி முஸ்லிம்களை மேலேற்றிவிடலாம்,ஆனால் துரதிஷ்டவசமாக,நம் சூடு சுரனை அற்ற முஸ்லிம் அமைச்சர்களைப்போலவே உதவி செய்யும் வல்லமைகொண்ட முஸ்லிம் நாடுகளும் இருப்பது கவலையே.