முசலி தேசிய பாடசாலையில் பலமான பாடசாலை அபிவிருத்திக்குழுவும் பழைய மாணவர் சங்கமும் நிறுவப்பட வேண்டும்
(முசலியூர் கே.சி.எம்.அஸ்ஹர்)
முசலித் தேசிய பாடசாலையில் விரைவாக எஸ்.டீ.சி. பாடசாலை அபிவருத்திக்குழு ,பழைய மாணவர் சங்கம் என்பன உடனடியாக அமைக்கப்பட வேண்டும்.அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களினதும் ,பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் அவர்களினதும் முயற்சியால் பௌதீக வளங்கள் சிறப்பாக வளர்ச்சியடைந்து வருகின்றன. கட்டிடங்கள் கம்பீரமாக காட்சி தருகின்றன.
இப்பாடசாலை முசலிப்பிரதேசத்தின் முதுபெரும் முதுசம் இதில் கற்ற மாணவர்கள் நாட்டின் நாலா பக்கங்களிலும் மிளிர்ந்து கொண்டு இருக்கின்றார்கள். இவர்கள் அனைவரும் இப்பாடசாலையின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கு ஒன்றுபட வேண்டும். புத்தீஜீவிகள், பாடசாலை அபிவிருத்திக் குழுவிலும் ,பழைய மாணவர் சங்கத்தின் ஊடாகவும் உள் நுழைந்து சரியான திசையில் பாடசாலையைக் கொண்டு சென்று கல்வித்தரத்தை உயர்த்துவதற்கு பாடுபட வேண்டும்.
கல்விக்கான சகாய உதவிகளை வறிய மாணவருக்கு பெற்றுக் கொடுத்தல் ,க.பொ.த. சாஃத ,உயர்தர கணித,விஞ்ஞான,கலை,வர்த்தகப்பிரிவு மாணவர்களுக்கு விஷேட மேலதிக வகுப்புகளை ஒழுங்கு செய்தல் ,வாண்மை நிறைந்த சிறந்த ஆசிரியர்களை இனங்கண்டு இப்பாடசாலைக்கு கொண்டு வருதல் ,போன்ற முயற்சிகளை பழைய மாணவர் சங்கமும் ,பாடசாலை அபிவிருத்திக் குழுவும் இணைந்து செயற்பட்டால் நிச்சயம் நிறைந்த பயன்கிடைக்கும் ,வலயக்கல்விப் பணிப்பாளருடனும், அரசியல் தலைவர்களுடனும் சிறப்பான தொடர்புகளைப் பேணி எம்மண்ணின் கல்லூரியின் கல்வித்தரத்தை உயர்த்த ஒன்றுபடுவோமாக


Post a Comment