Header Ads



கத்தாரில் போக்குவரத்து துறையில் சாதனை

(Inne) நெரிசலான டிராஃபிக் ஜாமில் மாட்டிக் கொண்டு டிரைவர்கள், பாதசாரிகள் படும் அவஸ்தைகளினூடே வேறு சில விஷயங்களையும் கவனித்திருப்போம்.

அது, ஆம்புலன்ஸ்!

ஒட்டு மொத்தமாக விழி பிதுங்கி நிற்கும் டிராஃபிக் ஜாமினுள் புகுந்து அவசர அவசரமாக வழியைத் தேடித் தவிக்கும் ஆம்புலன்ஸ் வேன்களும், கண்ணுக்கு முன்னே உள்ள சிக்னலில் தடுத்து நிறுத்தியுள்ள சிவப்பு விளக்கும் , தாண்டினால் 5 ஆயிரம் ரியால் ஃபைன் போட வைப்பேன் என ரேடாரும் பயமுறுத்த வழி கேட்டு பின்னால் கதறிக் கொண்டு வரும் ஆம்புலன்ஸுக்கு எவ்வாறு வழிவிடுவது என்று தெரியாமல் திணறும் மக்களும் கத்தர் நாட்டில் தினசரி காணும் வாடிக்கை.

இத்தகைய தடுமாற்றங்களின் மூலம், ஆம்புலன்ஸுக்குள் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் விபத்துக்குள்ளான நபர், தாமதம் என்ற ஒரே காரணத்தினால் இறந்து விடும் கொடுமையும் நடக்கிறது.

இந்த சிக்கலைப் போக்க, புதுமையை புகுத்தியுள்ளது கத்தர் அரசு. ஆம்புலன்ஸ் டிரைவரே தான் செல்லும் வழியில் உள்ள சிக்னல்களைத் திறந்து கட்டுப்படுத்தி கடந்து சென்று விட இயலும் ஹை-டெக் வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் கடந்த பிறகு தானாகவே அந்த சிக்னல் மூடிக் கொள்ள, பிற தடங்கள் திறந்து இயல்பு நிலைக்கு திரும்பும்.

நேற்று 18-02-2014 துவங்கியுள்ள இந்த புதுமையான முயற்சிக்கு கத்தர் வாழ் மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

கடந்த 2013 இல் மட்டும் கத்தர் ஆம்புலன்ஸ்கள் 1,30,000 அவசர அழைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன என்பதும், 879,039  கார்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டு டிராஃபிக் பெருகியுள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது.

No comments

Powered by Blogger.