போலி வேலையாட்களாக சம்பளம் பெறும் சவூதி அரேபியர்கள்..!
சவூதி அரேபியாவில் உள்நாட்டினருக்கு வேலை வழங்கும் அரசின் இலக்கை பூர்த்தி செய்ய அந்நாட்டின் கட்டுமான நிறுவனங்கள் ஆண், பெண்கள் என உள் நாட்டினரை போலியாக வேலைக்கு அமர்த்தியுள்ளனர். ஆனால் அந்த நிறுவனங்கள் வெளிநாட்டு தொழிலாளர்களை கொண்டு வேலை வாங்கி வருகின்றன.
சவூதி கசட் பத்திரிகைக்கு உள்நாட்டு இளைஞன் ஒருவர் கூறும்போது, தாம் வீட்டிற்குள் சும்மா இருப்பதற்கு மாதாந்தம் 1,500 ரியால் (52000 ரூபா) தருகிறார்கள் என்றார். இதன் மூலம் குறித்த நிறுவனம் தொழிற் துறையை சவூதி மயமாக்கும் அரசின் ஒதுக்கீட்டை பூர்த்திசெய்கிறது.
'உள்நாட்டில் இருக்கும் ஆண்களுக்கே வேலையில்லாத போது கட்டுமான நிறுவனம் ஒன்றில் ஆயிரக்கணக்கான பெண்கள் வேலை செய்கிறார்கள் என்று எப்படி நம்ப முடியும்' என்று தொழிற்துறை ஆலோசகரான பன்தார் அல் தபான் மேற்படி பத்திரிகை யில் கேள்வி எழுப்புகிறார்.
ஆனால் இந்த செயற் பாடு சவுதி நாட்டவர்களுக்கு வேலை வழங்குவதை விடவும் நாட்டின் பொருளாதாரத்தையே சீரழிக்கும் என்று வர்த்தக தலைவர்கள் எச்சரித்திருக்கி றார்கள்.
சவூதி தொழிலதிபரான தாவூத் அல் அசைம் குறிப்பிடும் போது, உள்ளூர் நிறுவனங்களில் புதிய தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்க முன்வருவதில்லை என்றார். 'தேவையான தகைமை யுடனும் அனுபவத்துடனும் இடைவெளியை நிரப்ப ஆட்களை தாருங்கள். நாம் வெளிநாட்டினரை பணியில் அமர்த்துவதை நிறுத்துகிறோம்' என்று அல் அசைமி குறிப் பிட்டுள்ளார்.

Post a Comment