Header Ads



பொத்துவில் ஆசிரியர் பிரச்சினைக்கு தீர்வுகாணுமாறு ஏ.எல்.தவம் வேண்டுகோள்

(எஸ்.அன்சப் இலாஹி)

அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் உள்ள மேலதிக ஆசிரியர்களைக்கொண்டு பொத்துவில் கோட்ட ஆசிரியர் பிரச்சினைக்கு தீர்வுகாணுமாறு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.தவம், கிழக்கு மாகாண ஆளுனர் ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்ரமவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொத்துவில் கோட்ட கல்விப்பிரச்சினைகள் தொடர்பாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.தவம், கிழக்கு மாகாண ஆளுனரை அவரின் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடும் போதே மேற்படி வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இதன்போது அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் 187 ஆசிரியர்கள் மேலதிகமாக கடமையாற்றிவரும் வேளையில் பொத்துவில் கல்விக் கோட்டத்தில் பலவருடமாக ஆசிரியர் தட்டுப்பாடு நிலவிவருகிறது. இதற்கு உரிய கல்வி அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்பதனையும் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் ஏற்கனவே முறையற்றவிதத்தில் இடமாற்றப்பட்டவர்களுக்கு உரிய தீர்வு வழங்கப்படவேண்டும். மற்றும் பாடசாலைக் கட்டடக் குறைபாடுகளையும் நிவர்த்தி செய்யுமாறு மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.

எனவே பொத்துவில் கோட்ட ஆசிரியர் சமமின்மையை அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் மேலதிகமாக கடமையாற்றும் ஆசிரியர்களைக்கொண்டு நிவர்த்திக்குமாறும், கட்டட தேவைகளையும் நிவர்த்திக்குமாறும் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஆளுனர் உடனடியாக நடவடிக்கை எடுக்க உறுதியளித்துள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.தவம் மேலும் தெரிவித்தார்.


No comments

Powered by Blogger.