Header Ads



'சமயத்தலைவர்கள் சகல சமயத்தவரும் மதிக்கக்ககூடியவர்களாகச் செயற்பட வேண்டியது அவசியம்'

( ஏ.எல்.ஜுனைதீன் )

சமயத்தலைவர்கள் சகல சமயத்தவரும் மதிக்கக்ககூடியவர்களாகச் செயற்பட வேண்டியது அவசியமாகும் என  சமாதனத்திற்கான சமயங்களின் இலங்கைப் பேரவையின் அம்பாறை மாவட்ட தலைவர் டாக்டர் அல்ஹாஜ் எம்.ஐ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார்.

டாக்டர் ஜெமீல் ஒரு சில சமயத்தலைவர்களின் செயல்பாடு  குறித்து மேலும் தெரிவித்திருப்பதாவது:-

இன்று நமது நாட்டில் சமயமும் சமயத்தலைவர்களும் சந்தர்ப்பவாதிகளினதும் அரசியல்இஅதிகார வர்க்கத்தினரதும் தேவைக்கேற்ப பாவிக்கப்படுவது கவலைக்குரியது.

சமயங்கள் மனிதர்களுக்கு வழிகாட்டியாகும். அதனை அனைவரும் தமது மனதில் கொண்டு செயற்பட வேண்டும் மாறாக சமயத்தை ஒரு காட்சிப் பொருளாக அல்லது பெருமைக்குரிய சாதனமாக தலையில் வைத்துக்கொண்டு அலைவது பொருத்தமல்ல.

அதேபோன்று சமயத்தலைவர்கள் அனைத்து மக்களாலும் மதிக்கப்பட வேண்டியவர்கள். சமயங்கள் கூறும் நல் விழுமியங்களை மக்களுக்குப் போதித்து மக்களிடையே சாந்திஇசமாதானத்தை வளர்க்க வேண்டியவர்கள். சமயத்தலைவர்களை அரசியல் நிகழ்வுகளில் காட்சிப் பொருளாக அமர வைப்பதும் அவர்களின் செல்வாக்கை சந்தர்ப்பத்திற்கேற்ப துஷ்பிரயோகம் செய்வதும் சமயத்தலைவாகளுக்குச் செய்யும் துரோகமாகும். அதேவேளை சமயத்தலைவர்கள் இதற்குத் துணைபோவது தமது சமயத்திற்குச் செய்யும் துரோகமாகும்.

அம்பாரை மாவட்டத்தில் சமயங்களுக்கிடையேயான ஒற்றுமையை மேம்படுத்தும் முன்னோடித்திட்டமாக 2006இல் இருந்து 'முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சிஇசெயல் முன்னணி' மேற்கொண்ட 'சமயங்கள் மூலம் சமாதானம்' எனும் நிகழ்ச்சித்திட்டத்தின் பலனாக 'அம்பாரை மாவட்ட சர்வ சமய சம்மேளனம்' 2008 இல் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் இது 'சமாதானதிற்;கான சமயங்களின் இலங்கைப் பேரவையின் அம்பாரை மாவட்டக் கிளை'யாக இயங்குகின்றது. இவ்வமைப்பு கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக பல வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதிலும் பல நல்ல அடைவுகளைப் பெற்றமைக்கும் சமயத்தலைவர்களின் பங்களிப்பு மிகவும் காத்திரமானது. ஆயினும் சமீபகாலமாக சில சமயத்தலைவர்களின் செயற்பாடுகள் அல்லது அவர்கள் பிழையாக வழிநடாத்தப்படுவது எமது நடவடிக்கைகளில் ஒரு மந்த நிலையை ஏற்படுத்தியுள்ளது. அது ஆரோக்கியமான சூழ்நிலையை ஏற்படுத்தாது.

இந்த நாட்டிலுள்ள சமயத்தலைவர்கள் நடுநிலையாகச் செயற்பட்டால் நிச்சயமாக இலங்கைத்திருநாடு அமைதியும் சமாதானமும் பூத்துக்குலுங்கும் நாடாகத் திகழும் என்பதில் ஐயமில்லை.

டாக்டர் எம்.ஐ.எம். ஜெமீல்  
தலைவர்
சமாதானத்திற்கான சமயங்களின் இலங்கைப்பேரவை (அம்பாரை மாவட்டம்)

No comments

Powered by Blogger.