Header Ads



ராஜபக்ஷவினர் பல பரம்பரைக்கு தேவையான பணத்தை சம்பாதித்து விட்டனர் - மங்கள சமரவீர

அரசாங்கத்திடம் இருந்து சலுகைகளை பெறுபவர்கள் மட்டுமே ஆளும் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை சிறந்த அரசாங்கம் எனக் கூறுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

நாட்டை அபிவிருத்தி செய்வதாக கூறி, ராஜபக்ஷ குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள் வெளிநாட்டு கடனை பெற்று அதில் அதிகளவில் தரகு பணத்தை வாங்கிக் கொண்டு வீண் விரயம் செய்கின்றனர் என்றும் மங்கள குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

ராஜபக்ஷ அரசாங்கம் பெற்றுள்ள கடனை அடுத்து ஆட்சிக்கு வரும் சகல அரசாங்கங்களும் கடனை வட்டியுடன் செலுத்த வேண்டிய நிலைமை ஏற்படும்.இதுவரை பிறந்திராத எதிர்கால சந்ததியினரே இந்த கடனை செலுத்த வேண்டிய நிலைமை உருவாகும்.

எவருக்கு என்ன நடந்தாலும் ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு அது பற்றிய கவலைகள் இல்லை. காரணமாக அவர்கள் பல பரம்பரைகளுக்கு தேவையான பணத்தை சம்பாதித்து விட்டனர்.

நாட்டின் மீது எந்த பற்றும் இல்லாத சலுகைகளை மட்டும் பெறும் நபர்களே இந்த அரசாங்கத்தை சிறந்த அரசாங்கம் என்று கூறுகின்றனர் என மங்கள சமரவீர குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.